Wednesday, January 28, 2009

நிர்வாணம் நிர்வாணம் தான்!






சுமனா கோமஸ் என்பவர் இலங்கையில் 51 வருட சிங்கள சினிமா துறையிலேயே அதிகளவில் திட்டுதல்களுக்கு உள்ளானவர். அந்த திட்டுதலுக்கு முதுகெழும்போடு முகம்கொடுத்த முகம்கொடுத்துக்கொண்டிருக்கும் பெண் என்றால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். இது சுமனா கோமசுடனான உரையாடல்.

தணிக்கை சபையினரின் கைகளுக்கு அகப்பட்டு வெளியிடப்­படும் திரைப்படங்கள் பற்றி ”பாலியல் அலை” நிலவுவதாக கூறப்படுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இதில் இருக்கும் முக்கிய பிரச்சினை கலை மற்றும் வர்த்தக முரண்பாடே. முன்னர் அனைவரும் என்னை நோக்கி அல்லவா திட்டினார்கள். இன்று அவர்களுக்கு எனனைத் திட்ட முடியாது. ஏனெனில் தற்போது ஏற்பட்டுவரும் அலை வளர்ந்து விரவி தொடர்ந்து வருகிறது. இன்று பாலியல் காட்சிகளில் நடிக்கத் துணியாத நடிகைகளும் இதில் நடிக்க வேண்டியேற்பட்டிருக்கிறது. நான் ஏகப்பட்ட தூற்றுதலுக்கு உள்ளாகி தனியாகவே வெட்டிய பாதையில் அவர்களும் போகத் தொடங்கியிருக்கிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சி. பலர் பகு பார்யா திரைப்படத்தை பார்த்து விட்டு வந்து கூறினார்கள், சுமனா நீ என்ன செய்திருக்கிறாய், நீ சங்கீதா செய்ததைப் போல செய்யவில்லையே என்று கூறினார்கள். நானும் அத்திரைப்படத்தைப் பார்த்து அக்கருத்தை உறுதி செய்துகொண்டேன்.

இருந்தாலும் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். எந்தவொரு நிர்வாண அல்லத பாலியல் காட்சிகளை கலா ரசனையுடன் கூடிய சட்டகத்துக்குள் கொண்டுவரும் ஆற்றலானது அந்தந்த திரைப்பட இயக்குனர்களின் அறிவாற்றலைப் பொறத்தே அமைகிறது. என்னைத் திட்டியவர்களிடம் நான் கேட்பது இதுதான். என்னுடைய காலை, அல்லது எனது மார்பகத்கை சைட் சொட்டிலும் காண்பித்திருப்பேன் இருந்தாலும் இவர்கள் என்னைவிட அதிகமாக வெளிக்காட்டியிருக்கிறார்கள். ஒரு காட்சியில் சங்கீதா தனது பாலுறுப்பு வரை ஆடையை அகற்றி நிர்வாணமாகின்றார். பார்வையாளர்களுக்கு அது அரைகுறையாக தெரிந்தாலும் 'ரஞ்சனுக்கு' அவை பார்த்து தெரிந்திருக்கும் அல்லவா? பார்வையாளர்களுக்கு பின் பகுதி தான் காண்பிக்கப்பட்டது. எப்படியோ எம்மவர்கள் மத்தியில் இருக்கின்ற பார்வை குழப்பகரமானவை.

நம் நாட்டில் உள்ள விமர்சகர்கள் உங்களையும் சங்கீதாவையும் பற்றி இருக்கிற பார்வைகள் பக்கசார்பானவை என்று நாங்கள் கருதுகிறோம்.

கலையாக இருந்தாலும், வர்த்தகமாக இருந்தாலும் நிர்வாணமானது நிர்வாணம் தான். சின்ன சின்ன வேறுபாடுகள் இருக்கலாம். சங்கீதாவினதும் எனதும் கால்களையும் மார்பகத்தையும் கலையென்றும் வர்த்தகம என்றும் பிரிப்பது அபத்தம். இதில் வித்தியாசம் இருப்பதாக கத்துபவர்கள் சினிமா துறையில் உள்ளவர்கள் தான். ”எகே வைரய-1” வில் நடித்த ரசிக்கா அப்படியான காட்சிகளில் தான் நடிக்கவே இல்லையென வாதிட்டார். ”எகே வைரய-2”இல் நான் சிறைச்சாலையொன்றில் சண்டித்தனமிக்கவளாகவும், தன்னினச்சேர்க்கையில் (lesbian) ஈடுபடுபவளாகவும் நடித்தேன்.


எனவே இவர்கள் தமது நலன்கள், மற்றும் அவ்வப்போதைய இருப்புக்காக வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுத்துக்கொண்டிருப்பவர்கள். அது போல சங்கீதா எப்படி நடித்தாலும் சங்கீதா அப்படி நடிக்கவில்லை என வாதிடுவதற்கே இத்துறையில் பலர் இருக்கின்றனர். எங்களுக்காக அப்படி வாதிடுவதற்கு எவரும் முன்வருவதில்லை ஏன் என்று இப்போது தெரிகிறதா? சிலர் சங்கீதாவை ரெடிக்கல் பெண் என்று கூட கூறினார்கள். ஆனால் சங்கீதாவை அப்படியான ஒரு ரெடிக்கல் பெண் என்று நான் ஏற்றுக்கொள்ளாததற்கு இரு காரணங்கள் இருக்கிறது. ஏன் சங்கீதா ”பகுபார்ய்ர்” திரைப்பட வெளியீட்டு காட்சிக்கு வரவில்லை. அது போல அத்திரைப்படம் திரையிடப்பட்ட போது வீட்டிலேயே சங்கீதா இருக்கவில்லை. அவுஸ்திரேலியா சென்றுவிட்டார். ஏன் இதற்கு முகம்கொடுக்க பின்வாங்க வேண்டும். எனவே தான் எமது எமது விமர்சகர்களின் பிதற்றுதல்களை நான் பொருட்படுத்துவது கிடையாது.

அது போல ”பகுபார்யா” திரைப்படத்தில் நடித்த ஒரு பிரதான நடிகர் கூறியிருந்தார். சங்கீதா கௌரவமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவராம். அவர் ஏனைய நடிகைகளைப் போல பாலியல் ஆசைக்காக நடிக்கவில்லையாம். ஏனையோர் பணத்துக்காக அப்படி நடிப்பார்களாம். ஆனால் சங்கீதா அப்படியில்லையாம். அதனை வாசகர்களை நம்பட்டாம். நான் கேட்க விருமபுகிறேன், சங்கீதா அத்திரைப்படத்தில் நடித்தது புண்ணியத்துக்காகவா? பொருளாதார பிரச்சினை பற்றியும் அந்த நடிகர் பேசியிருந்தார் அல்லவா? காம இச்சைகளுக்காகத் தான் நடிகைகள் பாலியல் காட்சிகளில் நடிப்பதாகக் கூறுவதும் அவரல்லவா? இன்றுவரை இந்த வகை சினிமா அலையில் நாங்களும் நடிக்கிறோம் என்பதைத் தவிர அந் நடிகர் கூறும் கதையைப் போல நாங்கள் நடிக்கவில்லை. அப்படி அவர் கூறுவாராயிருந்தால் அவருடன் நானும் படுத்து இருக்க வேண்டும். இந்த முரண்பாடானதும் குழப்பகரமானதுமான கதைகளுடன் நான் உடன்பாடில்லை.

எமது நாட்டிலுள்ள பல நடிகைகள் சிலவகை திரைப்படங்களில் நடித்ததன் பின என்னென்னவோ கூறுகிறார்கள். அது போல அப்படி நடித்ததன் பின் அதற்கு iதாpயமாக முகம்கொடுக்கிறார்களும் இல்லை. அதன்படி எமது நாட்டிலுள்ள பெண்களின் தைரியத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எனக்கு அன்று கூறியவற்றையே இன்றும் கூறி வருகிறார்கள். அன்றைய சுமனா கோமஸ் தான் இன்றும் இருக்கிறேன். எனக்கு கூறப்படும் எதற்கும் நான் அசையாமல் முகம்கொடுப்பது பலருக்கு தாங்க முடியவில்லை. நான் செய்ததை நான் ஒப்புக்கொள்ளத் தயங்கவில்லை. பலர் ”ஆசை பயம்” என்கிற ரீதியில் தான் தான் நடந்து கொள்கிறார்கள். எவராக இருந்தாலும் திரைப்படமொன்றில் நடிக்க முன்வரும் போது அதில் வரும் பாலியல் காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொள்ளவோ நிராகரிக்கவோ முழு உரிமையும் உண்டு. ஆனால் அதனை நடித்ததன் பின் அதனை எதிர்கொள்ளாதது தான் மிகவும் பிழையான விடயம்.

மேலும் நாங்கள் இப்படி பார்ப்போம். எமது நாட்டில் ”பத்தினி அம்மா”க்களைப் போல பல நடிகைகள் இருக்கிறார்கள். அவர்கள் ஏழு எட்டு லட்சம் தருவதாகக் கூறி யாராவது அழைத்தால் அந்த அத்தனை ”பத்தினி அம்மா”க்களும் நடிப்பார்கள். பகுபார்யாவில் சங்கீதா அப்படித்தான். வசந்தி சத்துரானி போன்ற இதுவரை முத்தக் காட்சிகளில் கூட நடிக்காத நடிகைகள் பெட்ரூம் காட்சிகளில் நடிக்கிறார்கள். அது போல அனைவருமே தற்போது உள்ள இந்த நிலைமையின்படி பிரசந்த விதானகே அல்லது வசந்த ஒபேசேகர போன்றோரின் திரைப்படங்களுக்கு (பாலியல் காட்சியுள்ள) ஏழு எட்டு லட்சங்களுக்கு நடிக்க வருகிறார்கள். இவர்கள் அனைவரும் போலித்தனமானவர்கள்.

(பாராதீசய 1999 யூலை இதழ்)

AddThis Social Bookmark Button


0 comments: to “

Design by Amanda @ Blogger Buster