Wednesday, January 28, 2009

பாலியல் வல்லுறவு குறித்து
செய்தியிடலின் போது எதிர்நோக்கும் பிரச்சினை!




என்.சரவணன்

சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோருமே இது குறித்த முறைப்பாடு செய்ய முன்வருவதில்லை. பெரும்பாலானோர் தங்களுக்குள் புதைத்துக் கொள்கின்றனர். முறையிட்டுவிட்டு இனி அதே இராணுவப் பிரதேசத்தில் தனக்கும் தனது குடும்பத்தினருக்குமான பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமுமில்லை என்பதை அவர்கள் அறிவர். அடுத்தது சமூகத்தின் முன் தனக்கு ஏற்படக்கூடிய அவமானத்தையும் எதிர்காலத்தையும் பற்றிய பீதி முறையிடச் செய்ய விடாது.

இவ்வாறு தரியமாக முறையிட வருவோர் மிக மிக சிலரே அவர்களும் தொடர்ந்து அதே உறுதியுடன் இருப்பதில்லை. அதற்கான காரணம், அவர்களுக்கு இது குறித்து ஆதரவாக இருந்தவர்கள் படிப்படியாக குறைவது. அச்சம்பவத்தின் மீதான ஆத்திரத்தை காலப்போக்கில் இழந்து விடுவர். தொடர்ந்து வரும் மிரட்டல், பீதி எதிர்காலம் குறித்த அச்சம் என்பனவும் இதற்கு காரணமாகிவிடுகின்றன. அண்மையில் கோணேஸ்வரி வழக்கு குறித்த பணிகளில் ஈடுபட்டு வரும் பெண்கள் அமைப்பொன்றைச் சேர்ந்த பெண்ணியவாதியொருவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பில் இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஆரம்பத்தில் வழக்கு தொடர்வதற்கு காட்டிய ஆர்வமும், உற்சாகமும் தற்போது எதிர்மாறாக காணப்படுவதாகவும், வழக்குக்கே சமூமளிப்பதை தவிர்த்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த நிலைமைகளை சரியாக விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

வெளித்தெரியப்பட்ட பல சம்பவங்கள் குறித்து போதுமான விபரங்களை அறிய முடியாதுள்ளது. அவை குறித்து சொல்ல பாதிக்கப்பட்டவர்கள் முன்வருவதில்லை. அவை பற்றிய பதிவுகளை எங்கும் பெற முடியாது.

AddThis Social Bookmark Button


0 comments: to “

Design by Amanda @ Blogger Buster