Thursday, January 29, 2009

ஒரு பாலுறவு:
அந்தரங்கத்திலிருந்து அரசியலுக்கு....




என்.சரவணன்

இன்று ”ஒருபாலுறவு” குறித்து சூடான விவாதம் நடந்து வருகின்றது. இது குறித்து ”சிரச” தொலைக்காட்சி சேவை, மற்றும் யுக்திய, ராவய, மாதொட்ட, பாராதீச போன்ற மாற்று பத்திரிகை, சஞ்சிகைகளிலும் விவாதம் தொடர்ந்து வருகிறது. இந்தளவுக்கு தமிழில் இது குறித்த விவாதம் இடம்பெறாதது ஒரு வகையில் துரதிருஷ்டவசமான ஒன்று.

இந்த விவாதத்துக்கு ஆரம்பம் எங்கிருந்து தொடங்கியது என்றால், அமைச்சர் மங்கள சமரவீர தனது கிரெடிட் கார்ட்டைப் பாவித்து இன்டர்நெட்டுக்கூடாக பாலியல் படங்களைப் பார்த்தார் என்ற குற்றச்சாட்டு பாராளுமன்றத்தில் ஐ.தே.க. வினரால் சுமத்தப்பட்டு பின்னர் அவர் மீதும் பொதுவாகவும் ”ஒருபாலுறவு”க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதனை ஒரு சந்தர்ப்பவாத அரசியலுக்கு மாறி மாறி காறி உமிழும் விவாதமாக அன்று பாராளுமன்றத்தில் இந்த சச்சரவு நிகழ்ந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்தே இந்த விவாதம் கட்சி அரசியலுக்கு அப்பால் தொடர்புசாதனங்களில் நடத்தப்பட்டது.

இன்றைய மைய நீரோட்டத்தில் பெரும்போக்காகவே ஒரு பாலுறவுக்கு விரோதமான கருத்துக்கள் ஆழமாக வேறூன்றியுள்ளன. இதற்கு எமது சமூக அமைப்பின் பண்பாடு, மதம், வர்க்கம், ஆணாதிக்கம் போன்ற ஆதிக்க மரபுவழிக் காரணிகளின் செல்வாக்கின் வழியாக வந்த ஐதீகங்கள் காரணமாக உள்ளன. எனவே இந்தக் கருத்தியலை முறியடிப்பது என்பதற்கு முன்நிபந்தனையாகவே மேற்படி காரணிகளை தகர்ப்பது என்பது அமைகிறது. ஒரு பாலுறவு நடைமுறையில் வழக்கிலுள்ள ஒன்றென்பதையும், அது குறித்து அவமானப்படுத்த, வெட்கங்கொள்ள, அசிங்கம் கொள்ள எந்தவித விஞ்ஞானபூர்வ காரணங்களும் இல்லையென்பதையும் ஒப்புக்கொள்ளத் தடையாக இந்த ஐதீகங்களே இருக்கின்றன.

ஒரு பாலுறவு என்பது திடீரென்று வானத்தில் இருந்து குதித்த அபூர்வமான ஒன்றல்ல அது ஏலவே எமது கலாசாரத்தில் நீண்ட காலம் புழக்கத்திலுள்ள ஒன்று. நிலவி வந்த ஐதீகங்கள் காரணமாக அது வெளிப்படைக்குரிய ஒன்றாக இருக்கவில்லை. அவ்வளவே. இன்று உலகமுழுவதும் ஜனநாயக உரிமைகளின் விரிவாக்கத்தினால் இன்று பகிரங்க உரிமை கோரி கருத்துகள் வெளியாகின்றன.

இன்று தன்னுடைய நண்பி தனது சக நண்பியை அல்லது நண்பன் தனது சக நண்பனைத் தழுவவோ, அல்லது கைகோர்த்து நடக்கவோ, தோளில் கைபோடவோ, மடியில் சாயவோ அஞ்சுகின்ற நிலைக்கு இந்த ஐதீகங்கள் கொண்டு வந்து நிறுத்தியுள்ளன. இதன் விளைவுகளாக பாலியல் குறித்த எந்தவித கலந்துரையாடலுக்கோ, அல்லது அது குறித்த புரிதலை நாடவோ விடாதது வரை விளைவுகளாக்கியுள்ளது. அவ்வாறான பேச்சு ஒரு நடத்தைக் குறைவாகவும், ஒழுக்கக்கேடாகவுமே நோக்கப்படுகின்றது. சொந்த மனைவி பாலியல் குறித்த கலந்துரையாடலை ஆரம்பித்து வைக்க தயக்கம் கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது. அது அவள் ஏற்கெனவே அனுபம் கொண்டவள் என்கின்ற நம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறது. இவற்றுக்கு பாலியல் குறித்த திறந்த கலந்துரையாடல் எம் சமூகத்ததில் இல்லாததே காரணம். இதன் விளைவுகள் மோசமானவை என்பது கூறித்தெரிய வேண்டியவையல்ல.

1883 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சட்டவிதிகளிலேயே முதன் முதலில் ஒரு பாலுறவு தடை செய்யப்பட்டு தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கப்பட்டது. பிரித்தானிய காலனித்துவ சக்திகள் தமது ஆட்சியிலேயே அந்தச் சட்டத்தை உருவாக்கினார்கள். ஆனால் இன்று அந்தச் சட்டத்தை பிரித்தானியாவில் நீக்கிவிட்டார்கள். இங்கு இன்னமும் அது நிலவுகிறது. இன்று ஒருபாலுறவு தண்டனைக்குரிய குற்றம். அது இயற்கைக்கு முரணானதாம். இலங்கை குற்றவியல் சட்டத்தின் 365ஆவது பிரிவின் பிரகாரம் இதற்கு 12 வருட சிறைத்தண்டனையும் கசையடியும் கொடுக்கப்படும்.

அண்மையில் நடந்த பாராளுமன்ற விவாதத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் மோசமான அவதூறுகள் காரணமாக அமைச்சர் மங்கள சமரவீர தான் ஒரு தன்னினச் சேர்க்கையாளன் தான் என்று ஆத்திரத்துடன் திருப்பித் திருப்பிக் கூறினார். இதைக் கூறியதும் அங்கிருந்த ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன மேற்படி சட்டத்தின் பிரகாரம் அவர் தண்டனைக்குரியவர் என்று தம் சந்தர்ப்பவாத அரசியலுக்கு சாதகமாக இதனை பாவித்தார்.

இதனைத் தொடர்ந்து இது குறித்த ஒரு விவரண நிகழ்ச்சி ஒன்றை ”சிரச” தொலைக்காட்சி செய்தது. அதில் பல புத்திஜீவிகள், மனித உரிமையாளர்கள், தன்னினச்சேர்க்கை உரிமையாளர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் என்போரின் பேட்டியும் இடம்பெற்றது. ”சிரச” கூறிய தகவலின்படி ராஜித்தவை இது குறித்து கருத்து தெரிவிக்க அழைத்திருந்தும் அதனை நிராகரித்து நழுவினார் என்று கூறுகின்றனர். ஆனால் ராஜித்த சேனாரத்ன பரவலாக எல்லா இடங்களிலும் ஒருபாலுறவு குறித்து கருத்து தெரிவித்து வந்தார்.

யுக்திய பத்திரிகைக்கு அவர் வழங்கியிருந்த செவ்வியில்...

”..நான் ஒருபாலுறவை கடுமையாக எதிர்க்கிறேன். இதற்கென்று இருக்கின்ற நிறுவனங்களில் அரசாங்கத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்மார் உள்ளனர். இந்த நிறுவனங்களுக்கு அரச அனுசரணை கிடைக்கிறது. இதன் மூலம் நாடு முழுவதையும் (Sex Club) பாலியல் சமூகமாக ஆக்கப் பார்க்கின்றனர். 2500 வருடகால பாரம்பரிய கலாசாரமுடைய இந்த சிங்கள பௌத்த நாட்டை அழிக்கப் பார்க்கின்றனர். இதனைக் கேட்டுக்கொண்டு மகா சங்கத்தினர் அமைதியாக இருப்பது என்னை ஆச்சரியமூட்டுகிறது. நான் கற்றிருக்கின்ற வைத்தியத்துறையைப் பொறுத்தவரை ஒருபாலுறவு என்பது மனநோயின் விளைவு. மனநோயாளர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும். அவர்களை புனருத்தாரனம் செய்ய வேண்டும். அதற்கு மாறாக அதனைப் பேண ஜனநாயக உரிமை வழங்குவதை நான் எதிர்க்கிறேன். எமது குடும்ப கட்டமைப்பை சீரழிக்கிற இயற்கைக்கு முரணான விடயத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது. பைத்தியக்காரத்தனமான சுதந்திரத்தை கதைத்துக்கொண்டு இதனை செய்ய முயல்வதை நான் இறுதி வரை எதிர்த்தே தீருவேன்.....”
என்றார். (யுக்திய செப்டம்பர் 06)

இவரின் இந்தக் கருத்தோடு சேர்த்து ஐ.தே.க. பிரமுகர் சீ.ஏ.சந்திரபிரேம, ஜே.வி.பி. பிரச்சார செயலாளர் விமல் வீரவங்ச, ந.ச.ச.கட்சி பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன பெண் பத்திரிகையாளரும் பெண்ணியவாதியுமான அனோமா ராஜகருணாநாயக்க, மற்றும் தன்னினச் சேர்க்கை அமைப்பின் தலைவர் சேர்மன் டி ரோஸ் ஆகியோர் யுக்தியவுக்கு கருத்துத் தெரிவித்திருந்தனர்.

ஜே.வி.பி. பிரச்சார செயலாளர் விமல் வீரவங்ச குறிப்பிடுகையில்...

”பாலியல் ஒருவாpன் தனிப்பட்ட உரிமை. ராஜித்தவுக்கு இது குறித்து பேச எந்த அருகதையுமில்லை. இதனை ஒரு இழிவுக்கும் குற்றத்துக்குமுள்ளாக்கும் ராஜித்த ஐ.தே.க.வுக்குள் இருக்கின்ற ஒருபாலுறவினரை எவ்வாறு காண்கிறார்.... இன்று ஐ.தே.க.வும் பொ.ஐ.மு.வும் மாறி மாறி குறை சொல்ல ஒன்றும் மிச்சம் இல்லை. ஏனென்றால் இரு கட்சிகளும் ஒன்று தான். ஒரே கொள்கை, ஒரே நடைமுறை. எனவே தான் அரசியல் கொள்கைகளுக்காக சண்டை பிடிப்பதை விட்டுவிட்டு தனிப்பட்ட விவகாரங்களை சந்திக்கு இழுத்து இழிவுபடுத்தி அரசியல் நடத்தத் தொடங்கியிருக்கின்றனர்....”

விக்கிரமபாகு கருணாரத்ன குறிப்பிடுகையில்...

”...இன்று உலகம் முழுவதும் ஒரு பாலுறவை மானுட ரீதியில் அணுகி அங்கீகாரமளிக்கின்ற போக்கை காணக்கூடியதாக இருக்கின்றது. ராஜித்தவிடம் ஒருபாலுறவு குறித்த மாறுபட்ட கருத்து இருந்தாலும் கூட அதனை ஏனைய சமூக, பொருளாதார காரணிகளுடன் நிறுவ முயலவில்லை. தனது இயலாமையை மூடி மறைக்க தனிப்பட்ட தாக்குதலைப் பிரயோகித்தமை குறித்து ராஜித்த வெட்கப்பட வேண்டும். இது ஐ.தே.க.வின் சீரழிவையே வெளிப்படுத்துகிறது. இவ்வாறான கருத்துகள் அசட்டை செய்யக்கூடியதல்ல....”

பெண்ணியவாதி அனோமா ராஜகருணாநாயக்க கூறுகிறார்..

”....குறுகிய அரசியல் சந்தர்ப்பவாதத்துக்கு இப்படிப்பட்ட தனித்துவமிக்க பாலியல் இறைமைகளை பலியாக்குவது என்பது துரதிருஷ்டவசமான ஒன்று. இப்படிப்பட்ட இழிவுபடுத்தல் எமது நாட்டில் நிலவுகிற வங்குரோத்துதனமிக்க அரசியல் போக்குக்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஒருபாலுறவு என்பது ஏதோ திடீரென்று வானத்திலிருந்து குதித்த அபூர்வமான ஒன்று அல்ல....”

சீ.ஏ.சந்திரபிரேம இது குறித்து கருத்து தெரிவிக்கையில்...

”...பௌத்தத்தின்படி பாலியல் குற்றம் என்று இல்லை. கிறிஸ்தவ சமயத்தில் தான் அப்படிப்பட்ட விதிகள் இருக்கின்றன. பௌத்தத்தில் பிக்கு-பிக்குனிகளுக்கு மாத்திரம் சகல பாலியல் இன்பங்களும் மறுக்கப்பட்டுள்ளன. எவ்வாறிருந்த போதும் இந்த பிரச்சினையின் மூலம் எமது சமூகத்தில் பாலியல் கருத்தாக்கம் குறித்த விடயம் பகிரங்க விவாதத்துக்கு வந்துள்ளது. அது எதிர்கால சமூகத்துக்கு மிகவும் நன்மை பயக்கத்தக்கது....”

சேர்மன் டி ரோஸ் கருத்து தெரிவிக்கையில்....

”....ஒருபாலுறவினர் என்கின்ற ரீதியில் நாங்கள் அமைப்பொன்றை உருவாக்கியதே அதற்குhpய உரிமையை ஏற்கச்செய்வதற்காகவே. அரசியல் நோக்கங்களுக்காக பாலியல் உரிமையை பலியாக்கியுள்ளனர். ஒருவருக்கு இந்த உரிமையை ஏற்காதிருக்க உரிமையுண்டு. ஆனால் நாகரிகமான ஜனநாயக முறையியல் என்று ஒன்று உண்டு. ஒருவர் ஒருபாலுறவு கொண்டதற்காக அவர் ஒருபாலுறவினர் என ஆகிவிடமாட்டார். அதற்கு பல காரணங்கள் உண்டு. இது தெரிவைப் பொறுத்தது. இலங்கையில் ஆயிரக்கணக்கான ஒருபாலுறவினர் உள்ளனர். அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருபவர்கள். ராஜித்தவின் கருத்தானது அந்த ஆயிரக்கணக்கான அனைவருக்கும் எதிரான தாக்குதல். இந்த மோசமான கருத்து குறித்து மக்கள் முன்னிலையில் ராஜித்த பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்....” என்றார்.

இப்படி இந்த விவாதம் சென்று கொண்டிருந்த போது ”மாதொட்ட”, மற்றும் ”பாராதீசய” (இப்பத்திரிகைகள் இரண்டும் மங்கள சமரவீரவின் அனுசரணையுடன் நடத்தப்படும் மாதாந்த சஞ்சிகைகள். இதன் ஆசிரியர் குழுவில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் முன்னைநாள் ஜே.வி.பி. இளைஞர்கள். இவை தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் மாற்று சஞ்சிகைகளில் குறிப்பிடத்தக்கவை. அரச சார்பற்றவை. பின்நவீனத்துவம், மாக்சீயம், பெண்ணியம், அமைப்பியல்வாதம், உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விவாதித்து வரும் முக்கிய இரு சஞ்சிகைகள். அது மட்டுமன்றி பாலியல் குறித்த விடயங்களை பகிரங்கமாக விவாதித்து வருகின்றவை.) பத்திரிகைகள் இது குறித்து நிறையப் பக்கங்களை ஒதுக்கி விவாதித்தது (ஒக்டோபர் இதழ்கள்). அச்சஞ்சிகைகள் ராஜித்தவை 12ஆம் நூற்றாண்டின் அரசியல்வாதியென்று கூறியிருப்பதுடன் அவரை பகிரங்க தொலைக்காட்சி விவாதத்துக்கு வரும்படி சவால் விடுத்துள்ளன.

ராஜித்தவோ சிரசவுக்கு பின்னர் அளித்த பேட்டியொன்றில் ”பாராதீசய” சஞ்சிகை ஒரு தூஷன பத்திரிகை என்று கூறியிருக்கிறார். அதன் பின்னர் பாராதீச சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் ”தூஷனம் என்றால் என்ன? கனவான்களே முடிந்தால் மோதுங்கள்!” என்று விவாதத்துக்கு அழைத்துள்ளனர்.

இந்த விவாதம் இவ்வாறு தொடர்ந்து செல்கின்றது. இது எவ்வாறிருந்த போதும் உண்மையிலேயே இது குறித்து பகிரங்க விவாதத்துக்கு வந்துள்ள இக்கருத்துப் பரிமாறலை உச்ச அளவு பயன்படுத்துவது சமூகத்தின் ஆரோக்கியமான சமூக மாற்றத்துக்கு அத்தியாவசியமான ஒன்று.

(சரிநிகர் இதழ் 157)

AddThis Social Bookmark Button


சிங்கள சமூக அமைப்பில் இன்றும் தொடரும் கன்னிப் பரிசோதனை - என்.சரவணன்  







கடந்த மே மாதம் 26ஆம் திகதி வெளியான தி ஐலன்ட் (The Island) பத்திரிகையின் முற்பக்க செய்தியில் கன்னித்தன்மை பரிசோதிப்பு முறை தென்னாசியாவிலேயே இலங்கையில் தான் நிலவுகிறது என்று பேராசிரியரும் டொக்டருமான சிறியானி பஸ்நாயக்க சாடியமை குறித்து ஐலண்ட் பத்திரிகையில் மே, யூன் மாதங்களில் மீண்டும் விவாதத்திற்கு வந்தது.

அவர் குறிப்பிட்டது இது தான்,

'தென்னாசியாவிலேயே இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள், மாலைதீவு, பூட்டான் எங்குமே இல்லாத கன்னித்தன்மை பரிசோததிக்கும் முறை இலங்கையில் மாத்திரம் தான் நிலவுகிறது. ஆய்வொன்றின்படி ஒரு பெண் முதலாவது தடவையாக பாலுறவு புரியும்போதுதான் பெண்ணுறுப்பு வழியாக இரத்தம் வெளியேறுவதாக இலங்கையில் 85 சதவீதமானவர்கள் நம்புவதாக தெரிவிக்கின்றது. ஆனால் 20-25 சதவீதமான பெண்களுக்கு முதலாவது தடவையாக பாலுறவுபுரியும் போது இரத்தம் வெறளியேறுவதில்லை என்பது வஞ்ஞான ரீதியாக உறுதிசெய்யப்பட்ட ஒன்று.”

டொக்டர் சிறியாணி பஸ்நாயக்க குறிப்பிடுகையில் தம்மிடம் வரும் தம்மிடம் வரும் பெண்களில் கணிசமானவர்கள், தான் கன்னித்தன்மையை இழக்கவில்லை என்று உறுதிச்சான்றிதழ் தரும்படி வேண்டி வருகின்றனர், பெரும்பாலும் கொழும்பின் இருதயமாக இருக்கிற பகுதியிலிருந்து கூட இந்த உறுதிச்சான்றிதழ் கோரி அதிகளவினர் வருவதாகவும் குறிப்பிடுகிறார், மேலும் அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்.

”சமீபத்தில் தயயொருவர் தனது 3 வயதேயுடைய சிறிய குழந்தையை கன்னித்தன்மைக்கான சான்றிதழ் தரும்படி அழைத்து வந்தார். அக்குழந்தைக்கு பாலுறுப்பில் ஏற்பட்ட காயமொன்றின் காரணமாக எதிர்காலத்தில் கன்னித்தன்மையை சந்தேகிக்கும் ஒன்றாக மாறிவிடக்கூடாது என்பதற்காக அது காயப்பட்டதனால் ஏற்பட்டது என்று சான்றிதழ் தரும்படி கோரி அந்தத் தாய் வந்திருந்தார். மிகவும் படித்த விடயமறிந்தவர்கள் கூட இப்படி செய்வத ஆச்சரியத்தைத் தருகிறது. சமீபத்தில் ஒரு பேராசிரியர் ஒருவர் கூட தனது மகளுக்கு கன்னித்தன்மையை உறுதி செய்யும் சான்றிதழ் வேண்டி வந்திருந்தார்.” என்கிறார் அவர்.

சிறியானி பஸ்நாயக்க இலங்கையில் பெண்ணிய செயற்பாட்டாளர்களில் ஒருவரும், குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தின் இயக்குனரும், பெண்களின் மருத்துவ சுகாதார விடயங்கள் குறித்து நிறைய எழுதி, பேசி வந்திருப்பவரும் கூட. 10 வருடங்களுக்கு முன் சிங்களச் சமூகத்தில் நிலவும் கன்னித்தன்மை பாரிசோதனை பற்றிய ஒரு விரிவான கட்டு­ரையொன்றையும் எழுதியிருந்தார். இக்கட்டுரை பின்னர் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு ”பெண் உடல் ஐதீகங்களிலிருந்து உண்மைக்கு வெளியே” எனும் நூலில் சேர்க்கப்பட்டிருந்தது.

சிறியாணி பஸ்நாயக்கவின் கருத்து ஐலன்ட் பத்திரிகையில் வெளிவந்ததைத் தொடர்ந்து சில ஆங்கிலம் படித்த சிங்கள ஆண்கள் பதிலளிக்கத் தொடங்கினார்கள். இவர்களின் வாதத்தின் சாராம்சத்தைப் பார்த்தால், இவர்கள் இப்போதும் நிலவும் கன்னித்தன்மை பரிசோதனை முறை பற்றிய தகவல்களை மறுக்கவில்லை. ஆனால் இது சிங்கள சமூகத்தில் ஆரம்பத்திலிருந்து இருக்கவில்லை என்றும் இது ஐரோப்பியரிடம் குறிப்பாக யூத பாரம்பரியத்தில் இருந்ததென்றும், காலனித்துவ காலத்தில் கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கோடு இதுவும் கூடவே இலங்கை சிங்கள மக்களிடம் ஊன்றிவிட்டதென்றும் வாதம் வைக்கின்றனர். யூத மரபில் இருந்ததற்கு ஆதாரமாக பி.ஏ.ஆரியதிலக்க என்பவர் பைபிள் வாசகங்களையும் ஆதாரம் காட்டுகிறார். 17ஆம் நூற்றாண்டில் ரொபர்ட் நொக்ஸ் எழுதிய குறிப்புகளை ஆதாரம் காட்டி சேர்ந்து வாழ்தல் (Living togrther), இரு கனவர்களுடன் ஒரே நேரத்தில் வாழ்தல் போன்ற விடயங்கள் சிங்களவர்களிடம் இருந்திரக்கிறது. அப்படிப் பார்க்கும் போது ஐரோப்பிய நாடுகளில் இப்போது தான் இத்தகைய நடைமுறைகள் வழக்கிலிருக்கின்றன, நாங்கள் எப்போதோ முன்னோடிகளாக இருந்திருக்கிறோம் என்பன போன்ற வாதங்களையும் காட்டத் தவறவில்லை.
சாராம்சத்தில் இவ்வாதங்கள் சிங்கள இனத்தின் பெருமிதத்தை வலியுறுத்துவதாகவும், அது கறைபடியாத அப்பழுக்கில்லாத ”புனிதமான” மரபைக் கொண்டதென்கிற வாதத்தை அடிப்படையாக மட்டுமே இருந்தது.

இது எந்த இனக்குழுமத்திடமிருந்து தொற்றிக்கொண்டதாக இருந்த போதும், இன்றும் சமூக வழக்கிலிருக்கும் ஒரு பாரதூரமான கொடுமை என்பது பற்றியும், இன்று கற்பொழுக்கம் பற்றிய புனைவுகள், ஐதீகங்கள் என்பவற்றை விளங்கிக்கொள்வது, அதனை நீக்குவது என்பனவற்றை இலக்காகக் கொண்ட ஆரோக்கியமாக உரையாடலை மேற்கொள்வது என்பது இன்னமும் வரட்சி நிலையில் தான் இருக்கிறது.

சொத்துடமை சித்தாந்தம் சொத்தை ஒன்றுகுவித்து மையப்படுத்துவதற்காகவும், ஏலவே இருக்கும் சொத்து துண்டாடப்படாமல் இருப்பதற்காகவும், ஏற்படுத்தப்பட்ட குடும்ப அலகும், அதனை சுற்றி கட்டப்பட்ட புனிதத்துவமும், கூட்டுக்குழுமங்களாக ஆக்குவதற்காக ஆக்கப்பட்ட சித்தாந்தங்களும் இவ்வகைப்பட்ட விடயங்களில் செல்வாக்கு செலுத்துகின்றன. ஆணாதிக்க சமூக அமைப்பைப் பொருத்தவரை பெண்ணை உடமையாக வைத்திருப்பதற்கும் குடும்ப அலகை கவனமாகப் பேணவுமாக இந்த கற்பொழுக்கங்கள் என்பனவற்றை கவனமாக கைகொண்டன. ஆனால் இன்றைய நடைமுறையில் இந்த தேற்றங்கள் மேற்தோற்றத்தில் தெரியாவிட்டாலும், குழந்தை, குடும்பம், ஒழுக்க மரபுகள், கற்பு, தூய்மை, புனிதம், கௌரவம், அந்தஸ்து என கற்பிக்கப்பட்டிருப்பதை நாம் வெளிப்படையாகக் காண்போம்.

இந்த வகையில் தான் கற்பொழுக்கம் பற்றிய மதவழி புனைவுகள், இலக்கியங்கள், அரச யந்திரம் கொண்டிருக்கிற சட்டங்கள், பிரச்சார சாதனங்கள், கல்வி வாயிலாக மிகக் கவனமாக நம்பச்செய்யப்பட்டிருக்கின்றன. ஆதிக்க அதிகார அமைப்புகளின் இருப்பு இவ்வாறான புனைவுகளை நம்பவைத்தலில் தான் தங்கியிருப்பதை நாம் அறிவோம்.

கற்பொழுக்கம் பற்றி தமிழ் மரபில் இருக்கின்ற இலக்கியங்கள், இதிகாச, புராணங்கள், மரபொழுக்கங்கள் என்பனவற்றைப் பற்றி புதிதாகக் கூறத்தேவையில்லை. இந்த கற்பொழுக்கம் பற்றிய எதிர்பார்ப்பு என்பது சர்வவியாபகமான ஒட்டுமொத்த ஆணாதிக்க கட்டமைப்பும் வேண்டிநிற்கும் ஒன்று. எனவே தான் ஆண்கள் கையிலிருந்த கடந்த அதிகார அமைப்புகள் எல்லாமே இலகுவாக கற்பொழுக்கத்தை வலியுறுத்தும் சித்தாந்தங்களை உற்பத்தி செய்து வடிவமைத்து பரப்ப முடிந்தது.

அந்த வகையில் கன்னித்தன்மை பரிசோதனை முறையென்பது பல நாடுகளில் பண்பாட்டு அம்சங்களோடு இணைக்கப்பட்டும், பல நாடுகளில் வெளித்தெரியாத மரபுகளாகவும் வழக்கிலிருந்து வருகின்றன. சமீபத்தில் துருக்கி செய்திப் பத்திரிகையொன்றில் வெளியான செய்தி இதனை உறுதி செய்தது. (பார்க்க பெட்டிச் செய்தி)

சிங்கள சமூக அமைப்பில் நிலவிவரும் கன்னித்தன்மை பரிசோதனை முறையை இந்த பின்புலம்கொண்டே ஆராய வேண்டியுள்ளது.

சிங்கள சமூகத்தில் நிலவும் கன்னித்தன்மை பரிசோதனை முறையானது சிங்கள சாதியமைப்பை மறுதலித்துவிட்டு பாhக்க முடியாது. கன்னித்தன்மை பரிசோதனையில் இன்றும் இலங்கையில் கொவிகம (சிங்கள சாதியப் படிநிலையில் முதலாவது சாதியாக இருத்தப்பட்டுள்ள இந்த சாதி தமிழ்ச்சமூகத்தில் வெள்ளாருக்கு சமமான விவசாயத்தை சார்ந்த சாதி) சாதியிலும், அதன் கிளைச்சாதிகளான ரதல, கொவி, பட்டி போன்றசாதிகளே அக்கறை காட்டி வருவதாக சிங்கள சாதியம் பற்றி ஆய்வு செய்பவர்கள் குறிப்பிடுகின்றனர். அதிலும் குறிப்பாக உயர் மத்தியதரவர்க்கத்தினரிடம் அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது. சம்பிரதாயபூர்வமாக கோலாகலமான முறையில் திருமணத்தை நடத்த தகுதியுள்ள சிங்கள பௌத்தர் உயர் மத்தியதரவர்க்த்தினரிடமே திருமணச்சடங்குகளில் ஒன்றாக இந்த கன்னித்தன்மை பரிசோதனை நடக்கிறது. இந்த கன்னித்தன்மை பரிசோதனையை மேற்கொள்வதும் சிங்கள சாதியமைப்பில் பிற்படுத்தப்பட்ட சாதியான ஹேன எனும் சாதியைச் சேர்ந்தவர்களே. இச்சாதியினர் தமிழ்ச்சமூகத்தில் வணணார் சாதிக்கு ஒப்பான சலவைத் தொழிலை மேற்கொள்ளும் சாதியாக இருத்தப்பட்டுள்ளது. இந்த சாதியினர் எண்ணிக்கையில் சிறியதாக இருந்தாலும் நாட்டில் பல பாகங்களில் பரந்து சுருங்கி வாழும் சாதியினர். இவர்களுக்கு அரச மற்றும் நிலப்பிரபுத்துவ பரம்பரையினருக்கு மாத்திரமே உடுதுணி துவைப்பது சாதித்தொழிலாக வைக்கப்பட்டது. ஆண் பெண் என இருபாலாரும் குறிப்பிட்ட உயர் சாதியினரின் வீடுகளுக்குச் சென்று துணிகளைச் சேகரித்து துணிகளில் கட்டி தலையில் சுமந்துகொண்டு சென்று துவைப்பர். ஏனைய தாழ்த்தப்பட்ட சாதியினரின் உடுதுணிகளை இவர்கள் துவைக்க மாட்டர்கள். ”பலி” எனும் சாதியினரே அதனை செய்வரென பேராசிரியர் ருல்ப் பீரிஸ் குறிப்பிடுவார்.

உயர் சாதியினருக்கு இவர்களின் தேவை இந்த உடுதுணி துவைப்பதை விடவும் வேறு வழிகளிலும் தேவைகள் இருந்தன. பிறப்பு, பூப்படைதல், திருமணம், மரணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் ஹேன மாமாவின் அல்லது ”றெதி நெந்தா” (துணிமாமி) ஆகியோரது உதவி தேவைப்படுகிறது. இவர்களின் இந்த சேவை பற்றி சமூகத்தில் பொதுவாக கேலி செய்யும் போக்கும் நிலவுவதாக கொள்ளப்படுகிறது.

திருமண முதலிரவின் போது திருமணக் கட்டிலில் விரிப்பதற்காக வெள்ளை விரிப்பொன்று மணமக்களுக்கு வழங்கப்படும். முதல் பாலுறவின் போது மணப்பெண்ணிடமிருந்து சிறிதளவு இரத்தம் இந்த வெள்ளை விரிப்பில்படுவது அவள் கன்னி என நிரூபிக்கும் மிகச் சரியான சான்றென கருதப்படும்.

எனது சிங்கள நன்பி ஒருவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தன்னோடு பயின்றவரை திருமணம் முடித்த போது கன்னித்தன்மை பரிசோதனை முறையிலிருந்து தப்ப செயற்கையாகவே இரத்தக்கறையை வெள்ளைத் துணியில் படவைத்தார்கள். இன்று ஒரு சிங்களச் சூழலில் பெண்ணிய எழுத்தாளராக இருக்கும் இவர், சம்பிரதாயங்கள் எப்படி விடயமறிந்தவர்களையும் இழுத்துவைத்துக் கொள்கிறது என்பதை அடிக்கடி குறிப்பிடுவார். இவ்வாறு மணமகன் கன்னித்தன்மையை எதிர்பார்க்கிறானோ இல்லையோ, தமது மகள் கன்னித்தன்மையைக் கொண்டவள் என்று பெண்வீட்டாரும், தனது மகன் கன்னித்தன்மையுள்ள பெண்ணைத்தான் திருமணமுடித்தார் என்பதை மாப்பிள்ளை வீட்டாரும் பெருமிதம்கொள்ளும் சடங்காகவும் இது இருக்கிறது. இந்தச் சடங்கை செய்யாவிட்டால் சமூகத்தில் கௌரவத்திற்கு இழுக்கு நோpடும் என்று பயம்கொள்வதையும் காணமுடிகிறது.

சம்பிரதாய பூர்வமான குடும்பங்களில் வெள்ளைத்துணியை பரிசோதித்துப் பார்க்கும் நிகழ்ச்சி திருமணத்திற்கு அடுத்த நாள் நடக்கும். இறுதியும் உறுதியுமான முடிவைத் தெரிவிக்க விபரங்களுடன் முடிவு கூறுவதற்காக, திருமணத் தம்பதியரின் உறவினப் பெண்களுடன் ”றெதி நெந்தா” அழைத்துச் செல்லப்படுவார். சில சந்தர்ப்பங்களில் இரண்டாம் பயணம் எனப்படும் ”தெவனி கமன” வின் போது (அதாவது தேனிலவு கழிப்பதை முதல் நாளும் வெள்ளைத்துணி பார்ப்பது மறுநாளைக்கு மாற்றப்படும்.) இது மேற்கொள்ளப்படும். இதற்குhpய சம்பிரதாயங்கள் பின்வருமாறு மெற்கொள்ளப்படும்.


1. மணமகள் இரண்டாம் பயணத்திற்கு சிவப்பு ஆடையால் அலங்கரிக்கப்படுவாள்.

2. மணமகனின் தாயார் சிவப்பு மலர்ச் செண்டு கொடுத்து மணமகளை வரவேற்பார்.

3. மணமகனின் குடும்பத்தினர், மணப் பெண்ணின் பெற்றோருக்கு சிவப்பு பூக்களை அனுப்பி வைப்பார்.

4. மணப்பெண், மணமகள் வீட்டுக்கு வரும்போது றபான் அடித்து பட்டாசு கொளுத்தப்படும்.

5. மணமகனின் தயார், விசேட பரிசுகளைக் கொடுத்து மணப்பெண்ணை வரவேற்பாள்.

வெள்ளை விரிப்பில் இரத்தக்கறை காணப்படாவிடில், அதாவது மணப்பெண் பரிட்சையில் தோல்வியடைந்தவளென்றால், அப்பாவிப்பெண் பகிரங்கமாகவே அவமதிப்புக்குள்ளாவாள். அத்தகைய தருணத்தில் மணப்பெண் நடாத்தப்படும் விதமானது இரண்டாம் பயணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திலும், குறிப்பிட்ட குடம்பங்களினதும் பிரதேசங்களதும் சம்பிரதாயங்களைப் பொறுத்தம் வேறுபடும். இரண்டாம் பயணத்தின்போது ”பரிட்சையில் தேறாத' மணப்பெண் தொடர்பாக கடைபிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் சில..

1. இரண்டாம் பயணத்திற்கு ஆடம்பரமற்ற வெள்ளைச் சேலை உடுத்தும்படி மணப்பெண்ணை வற்புறுத்துதல்.

2. மணமகனின் தாயார் வெள்ளை மலர்களுடன் மணமகளை எதிர்கொள்வாள்.

3. வரவேற்காமல் மணமகனின் தந்தை அல்லது யாரும் ஒரு ஆணைக்கொண்டு மணமகளை வரவேற்பது.

4. சுவரில் மாட்டியிருக்கும் படங்களை மறபக்கமாகத் திருப்பித் தொங்கவிடல்.

5. மணமகனின் உறவினர் மணப்பெண்ணின் உறவினர்களை உபசரிக்க மாட்டர்கள். அவர்களை அவமதிக்கும் விதமாக திருமண அலங்கார மேசையைத் தவிர்த்து ஓரமாகப் போடப்பட்டிருக்கும் மேசையில் உணவருந்தும்படி அவர்களுக்குத் தெரிவிப்பது.

6. உபசரிப்பதற்கு முன் கொண்டைப் பலகாரங்களின் கொண்டையை உடைத்து விடுவது.

7. அனைத்து விருந்தினர்களின் முன்நிலையிலும் மணமகனின் தாயார் ஐசிங்சீனியினால் செய்யப்பட்ட வெள்ளை றோசாப்பூவொன்றை கேக்கிள் வைப்பாள்.

8. வாழைப்பழத்தை அடியியிலிருந்து தோலுரித்தல்.

9. விருந்தினர்கள் முன்னிலையில் மணமகன் குடும்பத்தார் தமது அதிருப்தியை தெரிவிக்கும் விதமாக சிறு சொற்பொழிவை நடாத்துதல். (இது மிக அரிதாகவே நடக்கும்.)

”தூய்மை”யான மணப்பெண் கிடைக்காததையிட்டு தமது வருத்தத்தைத் தெரிவிக்கும் சொற்பொழிவை ஆற்றிவிட்டு அவர்களை வரவேற்பதும் நிகழும். மணப்பெண் ”கன்னி” இல்லை என்று கூறி மீளவும் மணப்பெண்ணின் பெற்றோரிடம் ஒப்டைக்கும் நிகழ்ச்சிகளும் இதன் போது நிகழ்ந்துள்ளன. இந்த சம்பிரதாயங்களை மேற்கொள்ளாத இட்ளில் கூட முதலிரவின் போது இரத்தம் வெளியேறாவிட்டால் கடந்தகால ஒழுக்கத்தை சந்தேகித்து மனைவியின் மீது விரக்திகொள்ளும் நிலைமையும் தொடர்கிறது.

சிங்கள திருமண விளம்பரங்களைப் பார்க்கையில் பெரும்பாலான விளம்பரங்கள் தமது ”தூ}ய்மையான”, ”கன்னித்தன்மையுள்ள” மகளுக்கு” போன்ற விடயங்கள் மணமகன் தேவை விளம்பரங்களின் போது மணமகள் தரப்பு விளம்பரங்களில் காணலாம். ஆனால் மணமகள் கோரி விடுக்கப்படும் விளம்பரங்களில் மணமகன் கற்பொழுக்கமுள்ளவன் என்று குறிப்பிடப்படுவதில்லை. அதேவேளை, அதே விளம்பரத்தில் கற்புள்ள பெண் கோரப்படும்.

அது போல சிங்கள சஞ்சிகைகள் பத்திhpகைகள் என்பவற்றில் மருத்துவ மற்றும் பாலியல் குறித்த பிரச்சினைகளை வாசகர்கள் மத்தியில் இருந்து கேள்வி பதில் பகுதிக்கு கிடைக்கப்பெறுபவற்றில் பெருமளவானவை மணமாகாத பெண்களிடமிருந்து என்பதும், அவர்களிடமிருந்து அதிகம் எழுப்பப்படும் கேள்வி கன்னித்தன்மையுடன் தொடர்புடையவை என்றும் டொக்டர். சிறியாணி பஸ்நாயக்க குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

”கன்னி” என வழக்கில் உள்ள அர்த்தப்படுத்தப்பட்டுள்ள கருத்து:- திருமணமாகாத இளம்பெண், கன்னிகழியாத பெண், திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்பவள் போன்றன. ஆனால் இதை விட இன்னொன்றும் மேற்படி நிலைமைகளின்படி தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அது தான் ”முதலாவது பாலுறவின் போது இரத்தம் வெளியேறும் பெண்ணே கன்னித்தன்மையுடையவள்” என்பது.

எனவேதான் திருமணத்திற்கு முன் இளம் பெண்கள் மத்தியில் கன்னித்தன்மை பரிசோதனையில் தாம் தோற்றுவிடுவோமோ என்கிற அச்சமும், பீதியுமாக ஒரு உளச்சிக்கலுக்கு ஆட்பட்டு வாழநேரிட்டுள்ளது. குறிப்பாக கன்னிச்சவ்வு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற அச்சம், இது விளையாட்டின் போது அல்லது சைக்கிள் ஓட்டும் போது, கடினமான வேலைகளின் போது, அல்லது ஏதாவது ஒரு முறையில் ஏற்பட்ட காயங்களின் விளைவாக இது ஏற்பட வாய்ப்புண்டு. இப்படியான சந்தர்ப்பஙிகளால் தான் சம்பந்தப்பட்ட பெண்ணோ அல்லது பெற்றோர்களோ இது இன்ன காரணத்தினால் ஏற்பட்டது எனும் மருத்துவ சான்றிதழைப் பெற முனைகிறார்கள். சிறியாணி பஸ்நாயக்க தனத கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

”ஒரு நாள் தாயொருத்தி தனது மூன்று வயதுடைய மகளை என்னிடம் கொண்டு வந்து மகளின் கன்னிததன்மை அழிந்து விட்டதா எனப்பரிசோதித்தப் பார்க்கும்படி அழுதவாறு கெஞ்சினாள். தாய் சமயலறையில் கீழே உட்கார்ந்திருந்து கத்தியால் காலால் அழுத்தியபடி கீரை அரிந்திருக்கிறாள். சிறுமி அவ்வழியாக ஓடும் போது கத்தியின் மெல் விழுந்து பிட்டத்தை வெட்டிக் கொண்டாள். காயத்தினால் குழந்தையின் எதிர்காலத்திற்கு எதுவித திங்கும் நேராது என நான் கூறியபோது அந்தத் தாயின் முகத்தில் ஏற்பட்ட ஆறுதலையும், மகிழ்ச்சியையும் அதைப் பார்த்த ஒருவரால் தான்நம்பமுடியும். அதன் பின்னர் தனது குழந்தை கன்னி தான் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் தரமுடியுமா என்று கேட்டாள். இவ்வாறான கன்னித்தன்மை சான்றிதழ்கள் இருப்பதாக எனக்கு தொpயாது. என்றாலும் இவ்வாறான சான்றிதழ் கோரப்படாமல் எனக்கு ஒரு வாரம் கழிவது அபூர்வமானது.” என்கிறார்.

இலங்கையில் நிலவும் கொடிய பிரச்சினைகளுக்கு முன்னாள் இத்தகைய மோசமான சம்பிரதாயங்களும் நடைமுறையில் நிலவத்தானே செய்கிறது. புனிதம், தூய்மை, தீட்டு, துடக்கு போன்ற ஐதீகங்களும், மூடநம்பிக்கைகளும் புனைவுகளாக ஆக்கி அவற்றுக்கு நிறுவன வடிவம் கொடுத்து அதன் தொடர்ச்சியைப் பேணுவதில் வெற்றி கண்டு வந்துள்ள ஆணாதிக்க சமூக அமைப்பை வெறும் வர்க்க சமூக அமைப்பால் தலைகீழாக புரட்டிவிடமுடியாது. அதற்கு போதிய சித்தாந்த பலம்பொருந்திய பண்பாட்டுப் புரட்சியும் அவசியமானது.

இறுதியாக சிறியாணி பஸ்நாயக்க கூறிய கூற்றோடு முடிக்கலாம். 'ஆய்வுகளின்படி 76வீதமான ஆண்கள் கன்னிப் பெண்களையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். திருமணத்தின் போது இந்த அத்தனை ஆண்களுக்கும் கன்னிப்பரிசோதனை நடாத்தப்பட்டால் எத்தனை பேர் சித்தியடைவார்கள்?”

1. என்.சரவணன் - சிங்கள சாதியமைப்பு பற்றி 1999 ஒக்டோபர், டிசம்பரில் வெளிவந்த சரிநிகர்.

2. The Island 2000 மே,யூன் பத்திரிகைகள்.

3. பெண் உடல் ஐதீகங்களிலிருந்து உண்மைக்கு வெளியே - பெண்கள் அபிவிருத்தி நிலைய வெளியீடு

4. உபுல் ராஜித்த - கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை கற்கைக்காக சமர்ப்பிக்கப்பட்ட சிங்கள மொழி ஆய்வுக்கட்டுரை

5. காலிங்க டியுடர் சில்வா - சாதியம், வர்க்கம் மற்றம் மாறிவரும் இலங்கைச் சமூகம் - மூலம் சிங்களம்

6. க்ரியா தற்கால தமிழ் அகராதி.

6. http://www.suntimes.co.za/1998/05/17/news/nets05.htm

AddThis Social Bookmark Button


தென்னாப்பிரிக்காவில் மாணவர்களிடம் கன்னித்தன்மை பரிசோதனை
தென்னாப்பிரிக்காவில் அமைந்துள்ள வடக்கு குவோசுலு நட்டால் எனும் பரதேசத்தில் சில பாடசாலைகளில் மாணவர் மாணவிகளிடையே கன்னித்தன்மை பாpசோதனை நடத்தப்பட்டிருக்கின்றன. நகர்ப்புறம் சார்ந்த பாடசைகளில் ஏறத்தாழ 3000 மாணவ மாணவிகளிடம் நடத்தப்பட்ட இந்த பரிசோதனையின் பின் கன்னித்தன்மையுடையவர்களென கல்வித் திணைக்களம் சான்றிதழ் கூட அளித்துள்ளது. ஆசிரியர்களாலேயே நடத்தப்படும் இந்தப் பரிசோதனைக்கு பெற்றோர்களின் பூரண ஆதரவு இருந்திருக்கிறது. அத்துடன் இந்த பரிசோதனை 6 வயதடையவர்களிடம் கூட நடத்தப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்த சான்றிதழ் புதுப்பிக்கப்படுவதற்காக மீண்டும், மிண்டும் இந்த சோதனை நடத்தப்படுவதாக தென்னாப்பிரிக்காவில் வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிகை குறிப்பிடுகிறது.

மாணவர்கள் சிறுநீர்கழிப்பதை அவதானித்தும், அவர்களின் முழங்காலுக்குப்பின்புறம் மற்றும் ஏனைய சில இடங்களில் தோல்களும் பரிசோதிக்கப்படுகின்றன.

பெண்களுக்கு பெண் ஆசிரியைகளாயே பாpசோதக்கப்படுவதோடு அவர்கள் கன்னிச்சவ்வையும் பரிசோதிக்கிறார்கள். இதற்கு ஆசிரியர்கள் தரும் விளக்கம் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக மேற்கொள்ளப்படும் சோதனையென்றே. சூலு இனத்தவர்களின் மரபில் திருமணத்திற்கு முன் பாலுறவு மரபை மீறும் குற்றமாகும்.

இந்தப் பரிசோதனைக்கு எவரும் வற்புறுத்தப்படாததாகக் கூறப்பட்டபோதும், கல்வித் திணைக்களம் இந்தப் பரிசோதைனையை மேற்கொள்பவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கிறது. கொம்பின்பிண்டோ எனும் பள்ளிக்சுடத்தில் 747 மாணவ மாணவிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் 500 பேர் சித்தியடைந்திரக்கிறார்களாம். கொப்பும்லொண்டோ எனும் பள்ளிக்கூடத்தில் 840 போpடம் நடத்தப்பட்ட சோதனையில் 250 பேர் தான் சித்தியடைந்திருக்கிறார்களாம்.

”நான் பரிசோதித்த 3000 மாணவர்களில் 135பேர் சித்தியடைந்திருக்கிறார்கள்” என மாலிங்கா எனும் பாசாலை அதிபர் குறிப்பிடுகிறார்.

பிலிசீவி எனும் ஆசிரியை குறிபிடுகையில் தான் மாணவர்கள் மத்தியில் அசெம்பிளியில் உரையாற்றும் போது தான் கனனித்தன்மையுடைவள் என்பதை பெருமிதத்துடன் குறிப்பிடுவதாகவும், எனக்கு வழங்கப்பட்டுள்ள கன்னித்தன்மை சான்றிதழை நான் சகலருக்கும் பெருமிதத்துடன் காண்பிப்பதாகவும், தனது கனவனுக்கான தனத அன்பளிப்பாக அந்த சான்றிதழை தான் அளிப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

14 வயதுடைய தமிலூலி மாணவி குறிப்பிடுகையில் ”நான் இரண்டு சான்றிதழ்களை வைத்திருப்பதையிட்டு பெருமைகொள்கிறேன். எனது வகுப்பிலுள்ள 28 மாணவர்களில் 20 பேர் தூய்மையானவர்கள்”

20 வயதுடைய நெலிசிலி எனும் உயர் கல்வி மாணவி குறிப்பிடுகையில் 15 பேருள்ள தனத வகுப்பில் தானும் தனது நன்பியும் தான் தூய்மையானவர்களென்றும், தனக்கு அளிக்கப்பட்டுள்ள சான்றிதழை தனது படுக்கையறைச் சுவரில் மாட்டி வைத்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார். ஆசிரியர்கள் தங்களது கடமையை நன்றாகச் செய்கிறார்கள் என்றும் அவர்கள் தனக்கு விருப்பமானவர்கள் என்றும் அந்த மாணவி மேலும் தெரிவிக்கிறார்.


நன்றி :
தென்னாப்பிரிக்க சண்டே டைம்ஸ்

AddThis Social Bookmark Button


என் உடல் மீதான உரிமை என்னதே!

"பெண் மீதான அடக்குமுறையின்
அடிப்படை பாலியலிலிருந்தே
ஆரம்பிக்கப்படுகிறது"


-குமுதினி சாமுவேல்-

என்.சரவணன்


பெண்கள் தொடர்பூடக கூட்டமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரும் இன்று அதன் இணைப்பாளராகவும் உள்ள குமுதினி சாமுவேல் நீண்ட காலமாக பெண்ணியம் சார்ந்த விடயங்களில் ஈடுபட்டு வருகிறார். 80களின் ஆரம்பத்தில் சுதந்திர வர்த்தக வலய பெண்களின் தொழிலாளர் போராட்டத்தின் முன்னோடியாக இருந்தவர். பெண்ணிய செயற்பாட்டாளர்கள் மத்தியில் அதிகம் பரிச்சயமானவர். பெண்களின் மீதான அடக்குமுறைகளை ஒவ்வொரு நாளும் பத்திரிகை செய்திகிளினூடாக கண்காணித்து அவை குறித்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்பட்டு வரும் ''பெண்ணுரிமைகளின் கண்காணிப்''பின் ஆசிரியராகவும் இவர் இருக்கிறார். பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டுவரும் இவர் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து பல்வேறு சர்வதேச நிறுவனங்களுக்கு அறிக்கையிட்டு வருவராகவும் இருந்து வருகிறார். மேர்ஜ் அமைப்பின் தேசியக் கமிட்டி உறுப்பினரான அவர் பெண்ணிய விடயங்களில் குறிப்பாக பெண்களின் சுகாதார, மறுஉற்பத்தி உரிமையில் அதிக ஈடுபாடு காட்டி வருபவர்.

சமீப காலமாக கருக்கலைப்பு உரிமை உள்ளிட்ட பெண்களின் சுகாதார உரிமைகள், மறு உற்பத்தி உரிமைகள் பற்றிய விடயங்கள் அதிகளவு பேசப்பட்டு வரும் நிலையில் தமிழ்ச் சூழலில் இது குறித்த கருத்தாடல்கள் போதுமானதாக இல்லை. மேலும் எனது உடல் எனக்கே சொந்தாமானது அதை தீர்மானிக்கும் உரிமையும் எனக்குரியதே எனும் கோஷமும் பெண்கள் அமைப்புகளால் பலமாக வலியுறுத்தப்பட்டு வரும் காலம் இது. இந்த நிலையில் இவை பற்றி உரையாட தேர்ந்த நபரென குமுதினி சாமுவேல் அவர்களை தெரிவு செய்தோம்.எனது உடல் எனக்குரியது எனும் கோஷத்தை முன்னெடுக்கின்ற ஒரு வேலைத் திட்டம் குறித்து அண்மையில் இலங்கை அரசு சார்பற்ற பெண்கள் கூட்டமைப்பினால் ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அது பற்றி விளக்குவீர்களா?

அதை இந்த வருட இறுதிப்பகுதியில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. குறிப்பிட்ட அந்த கலந்துறையாடலில் இவை பற்றிய விழிப்பூட்டல் நடவடிக்கைக்கு எப்படிப்பட்ட கோஷங்களை உருவாக்கி பிரச்சாரங்களை மேற்கொள்வது என்பது குறித்து மட்டும் தான் கலந்துரையாடினோம்.

பெண் உடல் மீதான ஆணின் அதிகாரம், மற்றும் அந்த அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கான புனைவுகள் பற்றி?
பெண்ணின் உடல் பற்றி எடுத்துக்கொண்டால் சிறு வயது தொடக்கமே அவளது உடல் பற்றிய தவறான நம்பிக்கைகளை ஏற்படுத்தி விடுகிறார்கள். பெண்ணின் மாதவிடாய் தொடங்கும் காலம் தொட்டு, திருமண கால மாதவிடாய் வரை எமக்கு கற்பிக்கப்படுபவை, எமக்கு கற்பிக்கப்படாதவை பற்றி முக்கியமாக அவதானித்துப் பாருங்கள். சுகாதார விடயங்கள் பற்றி தாய்மார் பேசுவதற்கு வெட்கப்படுகின்றனர். தந்தை மார் அது பற்றி பேசுவதே கிடையாது. இப்படியான நிலையில், ஒன்றில் நன்பிகள் மூலமாகவோ அல்லது சில நூல்களினூடாகத் தான் பெரும்பாலும் தெரிந்து கொள்கிறோம். இவற்றிற்கூடாக பெரும்பாலும் எமக்கு வந்து சேர்பவை தவறானவையாக இருந்து விடுகின்றன.

இன்று தமிழ், சிங்கள கலாச்சாரத்தில் காணப்­படுகின்ற ”பெரிய பிள்ளையாதல்” என்பது வெறும் ”சடங்கு” ஆகவே கொள்ளப்படுகிறது. அதன் போது பெண், திருமணத்துக்கு தயாரானவள் என்பதை உலகத்துக்குத் தெரியப்படுத்த சிகப்பு உடுத்தி ஒரு கண்காட்சியையே நடத்தி விடுகிறோம்.

ஒரு வருடத்துக்கு முன் யாழ்ப்பாணம் சென்றி­ருந்த போது ஒரு நிகழ்ச்சியை அவதானித்தேன். எனது நன்பி ஒருவாpன் உறவினர்கள் அவுஸ்தி­ரேலியாவில் இருந்து வந்திருந்தார்கள். விசாரித்­ததில் தனது பிள்ளைக்கு சாமத்திய சடங்கை நடத்துவதற்காக யாழ் அழைத்து வந்திருப்பது தெரிய வந்தது. இத்தனை பிரச்சினைகளின் மத்தியில் நடத்தத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி என்னை ஆச்சிரியப்படுத்தியது. சாமத்திய சடங்கு பற்றிய மரபான முறையை கவனித்தோமானால், மாதவி­டாய் முதல் தடவையாக வெளியேறுகிற சந்தர்ப்­பத்தில் ஆண்களின் பார்வையிலிருந்து விலக்கி வைத்து, நேரம் பார்த்து, குறிப்பிட்ட தினத்தில் நீராட்டி, கடவுளை வணங்கச் செய்து, பகிரங்கமாக உறவினர்கள், நண்பர்கள் பார்வையின் முன் கொண்டு வருவார்கள். இது முதலாவது சந்தர்ப்­பத்தில். ஆனால் 12 தடவைகள் (12 மாதங்கள்) மாதவிடாய் வந்தபின்னும் கூட இந்த சடங்கு நடத்தப்படுகிறது. இதன் காரணம் அதில் ”வாடிக்­கையாளருக்கு” அறிமுகப்படுத்தும் நோக்கமும் திருமணத்துக்கு தகுதி பெற்று விட்டாள் என்கின்ற செய்தியை தெரியப்படுத்துவதுமே உள்ளார்ந்து இருக்கிறது.

வயதுக்கு வந்ததும் ஆண்களுடன் சேரக் கூடாது, பேசக்கூடாது, பழகக் கூடாது என வீட்டார் நிபந்தனை விதிப்பார்கள். திருமண காலங்களில் கூட எமது சம்பிரதாயங்களில் திருமணம் பற்றியோ குறைந்தது பாலியல் விடயங்கள் பற்றி கூட விளக்கமளிப்பதில்லையே. திருமணமான பழையவ­ர்களைக் கேட்டால் தம­க்கு அந்த முதல் இறவின் போது நடந்தவை பற்றி ஆச்சரியமாக இருந்தாகக் குறிப்பிடுகின்றனர். சமீபத்தில் சிறியானி பஸ்நாயக்க செய்திருந்த ஆய்வொன்றில், மண­மா­காத பருவ வயது இளம் ஆண், பெண்கள் மத்தியில் பாலுறவு செயற்பாடுகள் அதிகாரித்து வருவதாகத் தெரிவி­த்துள்ளார். அது மட்டு­மன்றி இளம் சந்ததியினர் மத்தியில் இன்று பாலியல் விடயங்கள் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது என்பது உண்மை. ஆனால் மறு உற்பத்தி சுகாதாரம் என்றால் என்ன என்பது குறித்த முறையான விளக்கம் அவர்கள் மத்தியில் கிடையாது.

சுகாதாரம் மறு உற்பத்தி குறித்த விடயங்கள் பெருமளவு பெண்ணின் உடல், பாலுறவு என்பவற்றோடு ஒட்டியல்லவா பேசப்படுகிறது?


மறு உற்பத்தி சுகாதாரம் பற்றிய விடயங்கள் பரந்துபட்டது. பாலியல் ஈடுபாட்டின் போது கருக்கட்டப்படலாம். பாலுறவின் போது கருக்கட்டலை தவிர்க்க வேண்டுமாயின் எப்படிப்பட்ட முறையில் தவிர்ப்பது என்பது பற்றிய விளக்கம் பெரும்பாலும் கிடையாது. கருக்கட்டலை தவிர்க்கின்ற வகையில் பாதுகாப்­பான பாலுறவு கொள்வது எப்படி என்பது பற்றி திருமணமானவர்கள் சாதாரணமாக வைத்தியர்க­ளின் ஆலோசனையைப் பெறலாம். திருமண­மாவதற்கு முன்னர் ஆணும், பெண்ணும் பாதுகாப்பான பாலுறவு கொள்ள ஆலோசனை பெறுவதற்கு பெரும்பாலும் முடிவதில்லை.....

இரண்டாவது, பாலுறவின் போது ஏற்படக்­கூடிய நோய்கள் பற்றிய எச்சரிக்கை கொள்ள வாய்ப்பில்லை. பாலியல் சார்ந்த நோய்கள் உள்ள­வர்களை சமூகம் ஒழுக்கவியல் விவகாரமாகவே (moral) பர்க்கிறது. அவர்கள் பாவம் செய்தவர்­களாகவும், ஊழ்வினைப்பயனை அனுபவிப்­பவர்கள் என்றும் கருதுகிறது. அவ்வாறான நோய்களை தவிர்க்கும் முறைகள் பற்றி எமக்குத் தெரிவதில்லை. இன்று அதையும் விட எச்.ஐ.வி. எய்ட்ஸ் பற்றி குறைவாகவே பேசப்படுகிறது. இலங்கையில் பெரும்பாலானோர் எமது நாட்டில் அப்படியொன்றும் பெரிதாக இல்லை எனக் கூறிக்கொள்கின்றனர். பேசவே விருப்பமில்லாத விடயமென்பதால் அப்படியொன்று இல்லை­யென்று ஒளிக்கவே விரும்புகிறோம்.

இன்று போர்ப் பிரதேசங்களை எடுத்துக் கொண்டால் அங்கு இளம் - ஆண்கள் படையில் பெருமளவாக உள்ளனர். சாவிலிருந்து தப்பி, விடுமுறையில் திரும்பும் சந்தர்ப்பத்தில் அவர்களின் உணர்ச்சிகளைத் தணிப்பதற்காக பெண்களைத் தேடிக்கொண்டு செல்வார்கள். இன்று அனுராதபுரத்தில் பாரியளவில் விபச்சாரத் தொழில் நடந்து வருவது எம்மெல்லோருக்கும் தெரியும். எல்லைப் புறங்களிலும் இது தான் நிலைமை. மேலும் படையினர் அதிகமாக நடமாடும் இடங்களில் பெண்கள் பழியாக்கப்படுகின்றனர்.

விருப்பத்துடனோ விருப்பமி­ன்றியோ இவை நடக்கின்றன. பல பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. படையினர் சூழ உள்ள பிரதேசங்களில் படையினரின் பாலியல் தேவைகள் பெருமளவில் பூர்த்தி செய்யப்படுகின்றன. அப்படி­யான பிரதேசங்களில் பெண்களின் பாதுகாப்பான பாலுறவு, கருக்கட்டல் தவிர்ப்பு, சுகாதாரங்கள், பாலியல் நோய்கள் என்பவை பற்றி அக்கறை காட்டப்படுவதே இல்லை. அதற்கான வாய்ப்புகளே இல்லை. படையின­ருக்குக் கூட இது குறித்த விளக்கங்கள் அளிக்கப்படுகிறதா என்பது தெரி­யாது. அவர்கள் உறவு கொள்ளும் பெண்கள் பாதுகாக்கப்படுகிறார்­களா?

சிலர் ஆணுறை மாத்திரம் பாவிக்கின்றனர். ஆனால் பெருமள­வான ஆண்கள் ஆணுறையைப் பாவிக்க விருப்பப்படுவதில்லை. திருமணமான கனவனைக் கூட எமது பெண்கள் ஆணுறை பயன்படுத்து­மாறு வலியுறுத்தும் வழக்கம் இல்லையே. அவ்வாறான சந்தர்ப்ப­ங்களில் வழமைபோல ஆணின் அதிகாரம் தான் அதையும் தீர்மானி­க்கிறது. எனவே பெண்களின் உடலைப் பாதுகாப்பதற்கான வாய்ப்­புகள் இல்லை. இவை அனைத்தும் பெண்களின் மறு உற்பத்தி உரிமைகளுடன் தொடர்புடையவை.

பொதுவாக இவை குறித்த விழிப்புணர்வுகள் போதுமானதாக இல்லையே?


சமீப கால தரவுகள் படி குடும்பக் கட்டுப்­பாட்டுத் திட்டங்கள் வளர்ந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் அதிகம் என்று கூறுகின்றன. ஆனால் அது தற்போது குறைந்து வருவதாக சில மருத்துவ நிபுனர்கள் கூறுகின்றனர். குடும்பத்திட்டம் பற்றிய கருத்தூட்டல் நிகழ்ச்சிகள் இலங்கையில் எந்தளவு தூரம் மக்களை அடைகிறது என்பது தொpயாது. இல்லாமல் போனால், கருக்கட்டல் வரையறையில்லாமல் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது. தற்போது திருமணமாகின்ற வயதும் அதிகரித்து வருகிறது. பெண்களாயின் அது 26-28 ஆகிறது என்றும் ஆண்களாயின் 30 அல்லது அதையும் தாண்டுகிறது என்றும் கூறப்படுகிறது. எனவே திருமணமா­வதற்கு முன்னர் பாலுறவுக்கான வாய்ப்புகள் உண்டு. அதை விட திருமணமான பின்னர் வேற்று பாலுறவுக்கான வாய்ப்புகளும் உண்டு. இதைவிட எமது சமூகத்தில் கனவரிழந்தவர்களின் தொகை குறிப்பிடத்தக்க அளவு உண்டு. வடக்கிலும், தெற்கிலும், உள்ளனர். இவர்களுக்கு பாலியல் தேவைகள் இல்லையா? அல்லது அவர்கள் பாலுறவுக்கோ, பாலியல் வல்லுறவுக்கோ உள்ளாக மாட்டார்களா?

சம்பிரதாய எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் எமது சமூகத்தில் பாலுறவுகள் நடைமுறையிலி­ருக்கின்றன. நாங்கள் அதனை பிற்போக்குத் தனமாக உணர்ச்சிவசப்பட்டு மட்டும் பார்ப்போ­மானால் எம்மால் பிரச்சினைகளை அடையாளம் காணவும் முடியாது. அதனை தீர்க்கவும் முடியாது. யதார்த்தம் என்ன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த நவீன சமூகத்தில் இந்த யதார்த்தத்தைத் தடுக்க முடியாது. எனவே நாம் இது விடயத்தில் எடுக்கக்கூடிய ஒரு ஒரே வழி பெண்களைப் பாதுகாப்பது. அதற்கு எமக்கு தகவல்கள் தேவை. பாலுறவுகளின் போது பாதுகாப்பான வழிமுறைகள் தேவை. கருக்கட்டல் எவ்வாறு இடம்பெறுகின்றது. கருக்கட்டல் அவசியமில்லையெனில் அதற்கேற்றவகையில் பாலுறவு கொள்வது எப்படி, அதையும் மீறி கருக்கட்டப்பட்டால் அதை பாதுகாப்பான முறை­யில் கருக்கலைப்பது எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வு, திட்டமிடல் அவசியம். மத்திய தர வர்க்கத்தினருக்கு இவ்விழிப்புணர்வுகளுக்கான வாய்ப்புகள் அதிகம். வறுமை மிகுந்த, கிராமிய, மற்றும் தொழிலாள, விவசாய பிரிவினருக்கு இந்த வாய்ப்புகள் எட்டுவதில்லை. அவர்களைப் போய் இந்த விழிப்பூட்டல்கள் போய் சேருவதில்லை, அல்லது வெட்கம் காரணமாக அவர்கள் பின்வாங்குகின்றனர். இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசங்களில் இதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் கூட இருப்பதாகத் தெரியவில்லை. மலையகத்­திலும் இந்த நிலமை இருக்கிறது. மலையகத்தில் பெரும்பாலும் நிரந்தர குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்கின்றனர்.

இன்று கருக்கலைப்பு உரிமை பற்றிய விவாதம் சூடு பிடித்து வருகிறது. அதற்கென்ன காரணம்?


இலங்கையில் மாத்திரமல்ல உலக அளவிலும் தாய்மையைப் பாதுகாப்பது (safe motherhood) என்ற ஒரு காரணத்துக்காக மாத்திரம் தான் கருக்கலைப்பை செய்து கொள்ளளாம் என்கின்ற கருத்து உள்ளது. அதனடிப்படையிலேயே சட்டங்களும் பல நாடுகளில் வகுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கருக்கலைப்பு சட்டத்துக்கு விரோதமான ஒன்று. உங்களுக்குத் தெரியும் இன்று இலங்கையில் நாளொன்றுக்கு 750க்கும் மேற்பட்ட சட்டவிரோத கருக்கலைப்புகள் இடம் பெறுவதாக ஐ.நா.வின் தகவல் கூறுகின்றன. இதன் போது தாய்மார் 5-6 வீதம் வரை மரணிக்கின்றனர். இதன் பின்னராவது நாம் பெண்களைப் பாதுகாப்பதா இல்லையா என்பது குறித்து சிந்திக்க வேண்டும். இல்லையென்றால், கருக்கலைப்பு ஒரு உயிர்க் கொலை, பாவம் என்கின்ற கருத்தாக்கத்திலிருந்து தொடங்கினால் உயிருடன் இருக்கிற தாயின் உயிர், ஆரோக்கியம், எதிர்காலம் குறித்த முறையான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும். கருக்கலைப்பை சட்ட ரீதியில் அங்கீகரிக்க வேண்டும். அதற்கான ஆரோக்கியமான வசதிகளையும் ஏற்படுத்துவது அரசின் பொறுப்பு. பெரும்பாலும் கருக்கலைப்பைத் தீர்மானிக்கும் போது ஆணும் பெண்ணு­மாக உடன்பட வேண்டும் என்றும் கூறி வருகிறா­ர்கள். ஆனால் கருவை சுமப்பதும், அதன் விளை­வுகளை சந்திப்பதும் பெண் என்பதால், குறித்த தீர்மானமெடுப்பதில் பெண்ணுக்கே முன்னு­ரிமை இருத்தல் அவசியம். விவாகத்துக்குப் புறம்பான பாலுறவு அதிகமாக இருக்கிறதென்று எமது புள்ளிவிபரங்களே கூறுகின்றதென்றால், படையினரின் பாலியலு­க்கு பலியாகும் பெண்க­ளின் எண்ணிக்கை அதிக­ரிக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றதென்றால் அதனால் ஏற்படும் கருவை கலைப்பதாயின் அந்த ஆண்களைத் துணைக்கு கூப்பிட முடியாது. எனவே, பெண்ணின் தனிப்பட்ட தீர்மானத்துக்கு வழி சமைக்க வேண்டும். பெண்கள் இந்த விடயத்­தில் பொறுப்பற்ற தீர்மா­னத்தை எடுப்பதில்லை. கருக்கலைப்புக்கு சட்ட அங்கீகாரம் அளித்து விட்டால் சகலரும் குடும்பத்திட்ட முறைகளை கைவிட்டுவிட்டு கருக்கலைப்பை நோக்கிச் செல்வார்கள் என்கின்ற நம்பிக்கை எமது நாட்டவர் மத்தியில் உண்டு. கருக்கலைப்புக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய நாடுகளில் ஒன்று நெதர்லாந்து. கருக்கலைப்பு சட்ட பூர்வமாக்கப்­பட்டதன் பின்னர் அங்கு கருக்கலைப்பின் தொகை முன்னரை விட அதிகளவில் குறைந்திருக்கிறது. இப்படி உதாரணமாக பல நாடுகளைக் காட்டலாம்.

எப்படி அது சாத்தியமானது?


கருக்கலைப்பு சட்டபூர்வமாக்­கப்பட்டதோடு கூடவே முறையான குடும்பத்திட்ட சேவைகள், தகவல் பிரச்சாரங்கள், விளக்கமளிப்பு ஆலோசனைச் சேவைகள் என்பவை­யும் செய்யப்பட்டன. அதற்கென்று கொள்கைகளும் வகுக்கப்பட்டன. அவ்வாறு செய்யப்பட்டால் இங்கும் கருக்கலைப்பு குறையுமென்றே நான் நம்புகிறேன். இலங்கையில் ஏற்கெ­னவே குடும்பத்திட்ட சேவை இருக்கிறது. கருக்கலைப்பு சட்டபூர்வ­மாக்கப்பட்டால் அதற்கொன்று கொள்கைவகுப்பு, வேலைத்திட்டங்கள் அமைக்கப்படவேண்டிவரும். அப்படி செய்யப்பட்டால் இந்த குடும்பத்திட்ட சேவையும் மறுசீராக்கம் செய்து அதிகப்படுத்த வேண்டிவரும்.

கருக்கலைப்பு தொடர்பான பொறுப்பு வாய்ந்த ஆட்சி அதிகார தரப்பினரின் நடவடிக்கைகள் குறித்து...?


1995இல் பாராளுமன்றத்துக்கு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வந்த கருக்கலைப்பு பற்றிய சட்டசீர்திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதன்படி சூழலில் ஏதாவது பிரச்சினை இருந்தாலோ, அல்லது பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டாலோ, அல்லது அசாதாரணமான நிலைமைகள் இருந்தாலோ அந்த கருவை கலைக்கலாம் என்கின்ற திருத்தங்களை உள்ளடக்க முயன்றார். ஆனால் அதனை கத்தோலிக்க, இந்து, முஸ்லிம் மத நிலைப்பாடுகளிலிருந்து பலர் எதிர்த்ததால் அச்சட்டமூலம் திருத்தப்படவில்லை. அமைச்சர் அதனை வாபஸ் வாங்க வேண்டி வந்தது. ஆனாலும் இறுதியில் அவர், இறுதியில் கருக்கலைப்பு பற்றி சட்டத்தில் பேசாது விடுவோம். அதையாவது செய்வோம். அதனை சட்டத்துடன் சேர்க்கத் தேவையில்லை. அது ஒரு மருத்துவம் பற்றிய விடயம். எனவே ஆஸ்பத்திரியில் சாதாரண நோய்களைப் போல இதனையும் செய்ய வாய்ப்பு கிட்டும் என்று அவர் கூறினார். ஆனால் அதற்கு முன்னை­யதை விட அதிகளவு எதிர்ப்பு கிளம்பியது. கடைசியில் அவர் இச்சட்ட மூலத்தை மீண்டும் கொண்டுவர தான் முயற்சிப்பதாகக் கூறினார். அனால் இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்க­ளுடன் முறையான புரிந்துணர்வை எட்டுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படமையினால் இன்று வரை அதில் வளர்ச்சி எதுவும் இல்லை.

இது அவரது கடமை அல்லவா என்று விட்டுவிட முடியாது. பாராளு­மன்றத்துக்கு மீண்டும் கொண்டு வரும்படி கோரி நிர்ப்பந்திக்க சில நிறுவனங்கள் உள்ளன. மகளிர் விவகார அமைச்சு, குடும்பத்திட்ட, சுகாதார நிறுவனம், தேசிய பெண்கள் கமிட்டி, பெண்கள் அமைப்புகள், மனித உரிமைகள் குழுக்கள் இவைகளால் அரசுக்கு அழுத்தங்களை ஏற்படுத்த முடியும். சட்டத்துறையினர் மத்தியிலும் இதற்கு ஆதரவு இருக்கிறது. பொலிஸார் மத்தியிலிருந்தும் தற்கு ஆதரவு இருக்கிறது. ஏனெனில் சுற்றி வளைத்து சோதனை செய்வது கைது செய்வது என்பவற்றை இவர்களே செய்கின்றனர். சில இடங்களில் மூன்று மாதங்களுக்குள் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். கருக்கலைப்பை ஆரம்பத்திலேயே செய்ய முடியாத­வர்கள் குழந்தையை பெற்றுக் கொண்டதும், மலசல கூடங்கள், வாய்கால், குப்பைத் தொட்டிகள், காண்கள் என்பனவற்றில் போட்டு விட்டுப் போகும் சந்தர்ப்பங்களையும் அவ்வப்போது செய்திகளில் காண்கிறோம்.

அமைச்சர் கொண்டு வந்த சட்டமூலத்தை தயாரிக்கும் போது அதில் பெண்கள் அமைப்புகள் பல சம்பந்தப்பட்டிருந்தன. பெண்கள் அமைப்புகள் என்கின்ற ரீதியில் நாங்கள் செய்ய வேண்டியது திர்மானமெடுக்கும் தரப்பிலுள்ளவர்களை எமது இலக்கை நோக்கித் தள்ளச் செய்வதே. இது வரை அப்படியான செயற்பாடுகளில் ஈடுபட்டது கிடையாது. இதைச் செய்வது எம்மெல்லோரினதும் கடமை. இது வரை ஒரு மனித உரிமைகள் அமைப்பாவது பெண்களின் பிரச்சி­னையொன்றுக்காக ஆர்ப்பாட்டம் செய்ததைக் கண்டதில்லை. பெண்களின் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினை­யாக கருதுவது கிடையாது.

பெருமளவான தொடர்பு சாதன­ங்கள் கூட இதனை எவ்வாறு செய்திப்­படுத்துவது என்பது குறித்த விழிப்­புணர்வு கிடையாது. ஒரு பக்கத்தில் கருக்கலைப்பு குறித்து செய்தியிடுகின்ற வேளை மறுபுறம், ”கருவிலேயே கொலை” என்று கருக்கலைப்பு பற்றிய தவறான கருத்துக்களைப் பரப்பும் வேலைகளும் செய்யப்படுகின்றன.

ஆணுக்கு தேவைப்படுகிற போது பிள்ளை பெற்று கொடுப்பதற்கும், ஆணுக்குத் தேவையற்ற நேரத்தில் குழந்தையை தவிர்ப்பதற்கும் பெண், இயந்திரம் அல்லவே.

குழந்தை பிறந்த பின்னர் குழந்தைக்குத் தான் இந்த சமூகத்தில் நிம்மதியாக வாழும் வாய்ப்பு தான் இருக்கிறதா? அந்த தாய்க்குத் தான் நிம்மதியாக வாழும் வாய்ப்பு உண்டா? அவள் அதன் பின்னர் இந்த சமூகத்தின் பார்வையில் நடத்தைக் கெட்டவளா­கவும், வேசி என்றுமல்லவா அழைக்­கிறது? இப்படி பிறந்த பின்னர் நிம்மதியாக வாழ விடாத சமூகம் தான் அதே குழந்தை பிறக்கவிடாமல் செய்வதற்கு எடுக்கும் முயற்சியின் போது இது உயிர் என்று கத்துகிறது.

சகலரும் இது விடயத்தில் இப்படி சிந்தியுங்கள், தங்களின் மனைவிக்கு, மகளுக்கு, தாய்க்கு, சகோதாpக்கு இப்படி நேரிட்டால் என்ன தீர்மானம் எடுப்பீர்கள்?

இது சுற்றி சுற்றி கற்பு குறித்த மரபார்ந்த கருத்தியல், ஐதீகங்களையல்லவா மையப்படுத்தி நிற்கிறது?
அது தான் உண்மை. கற்பு குறித்த ஐதீகம் பெண்ணின் உடல் மீதான ஆணின் அதிகாரத்திலிருந்து ஆரம்பிக்கிறது. கற்பை பாதுகாத்தல் என்கின்ற விடயம், பாலியலை சுதந்திரமாக பெண் பாவிக்க முடியாது என்கின்ற கருத்துநிலை, அது கட்டிய கணவனுக்கு மட்டுமே ஏனைய பண்டஙகளைப் போல சொந்தமானது, கற்பு புனிதமானது, தூய்மையானது என்கின்ற புனைவுகளை சுற்றிக் கட்டப்பட்டது. இந்த தூய்மையை, புனிதத்தை தனது ஆணுக்காக, கணவனுக்காக ”கெடாமல்” காக்க வேண்டும். குடும்பக் கட்டமைப்பின் இருப்புக்கும் கூட, குறிப்பிட்ட குழந்தையின் தந்தை தானே தான் என்று உறுதி செய்யும் வகையிலமைந்த இந்த கற்பு குறித்த கட்டுப்பாடுகள் சுமத்தப்­பட்டுள்ளது. இது மீறலுக்குள்ளாக்­கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் தான் ”வேசி” என்கின்ற பழிச்சொல் சுமத்தி, அவமானத்துக்குள்ளாக்கி, தலைகுனி­வுக்குள்ளாக்கி கற்பு குறித்த பயம் திணிக்கப்படுகிறது. பெண்ணின் பாலியலை, உடலை கட்டுப்படுத்­துவதில் ஆணாதிக்கம் எப்போதும் குறியாகவே இருந்து வருகிறது. பெண்ணின் மீதான அடக்குமுறையின் அடிப்படையே பாலியலிலிருந்து தொடங்குவதாகவே எனக்குப்படுகிறது. கற்பு பற்றிய மாயைகள் ஏற்படுத்தி­யிருப்பதும் அதற்காகத் தான். விவாகத்தக்குப் புறம்பான பாலியலுக்கு இடமில்லை என்ற நிபந்தனை பெண்ணுக்கு விதிக்கப்பட்டிருப்பதும் அதற்காகத்தான். கருக்கலைப்பு பற்றிய விதிகள் பெண்ணுக்கு ஏற்படுத்தியிருப்­பதும் அதற்காகத் தான். பெண்ணுக்கு இவை குறித்த சுயநிர்ணய உரிமை கிடையாது. அடக்கப்படும் எந்த தரப்பினரும் இந்த சுயநிர்ணய உரிமை வேண்டியல்லவா போராடுகிறார்கள். அதே சுயநிர்ணய உரிமைக்காகவே பெண்ணும் போராட வேண்டியி­ருக்கிறது. அதிகாரத்துவத்திற்கெதிராக போராட வேண்டியிருக்கிறது.

நேர்காணல்: என்.சரவணன்

AddThis Social Bookmark Button


கற்பு - ஒழுக்கம் - பாலுறவு:
புனைவுகள்
என்.சரவணன்

பாலியல் குறித்த விடயங்கள் புலமைத்துவ மட்டத்தில் பேசுபொருளாக ஆக்கப்பட்டு வருகிறது. இதே வேளை பெண்களின் மீதான பாலியல் வன்முறைக­ளின் சமீபகால அதிகரிப்பையும் அதன் கொடுரத்தையும் கூடவே அறிந்து அனுபவித்து வருகிறோம்.


இளையதம்பி தர்சினி (வயது 20) எனும் பெண் இரு வருடங்களுக்கு முன் டிசம்பர் 18 அன்று கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி கொலை செய்து பின் கல்லொன்­றுடன் கட்டி கிணற்றொன்றில் போட்டிருந்த செய்தி அனைவருக்கும் தெரியும். இந்தச் செய்தி வெளியான போது கூடவே இந்தப் பெண்ணின் ஒழுக்கப்பண்புகள் குறித்த செய்தியும் சிலரால் பரப்பப்பட்டன. படையி­னரின் இந்த காடைத்தனத்தை மூடிமறைக்க அரச இயந்திரமும், போpனவாத கட்டமைப்பும் அப்பெண்ணின் ஒழுக்கப்­பண்புகள் மீது கேள்வியெழுப்பும் வண்ணம் கதைபரப்பியதை பெண்கள் அமைப்புக்கள் கண்டித்தன.

இத்தனை கோரத்தனத்தின் பின்னும் கூட அதிகாரத்துவம் படைத்த ஆணாதிக்கம் தனது ”ஆண்மைத்துவ” செய்கையை மறைக்கவென, பலியாக்கப்பட்ட பெண்ணையே மீண்டும் மோசமாக சித்தரித்து அக்காடைத்தனத்தை நியாயப்படுத்தவோ அல்லது அதனை சமப்படுத்தவோ முனைவதைக் காண்கிறோம்.

இதுவரை காலமும் பாலியல் வல்லுறவுக்­குள்­ளான பெண்ணை ஆபாசமான உடைய­ணிந்­திருந்தாள், ஆபாசமாக காட்சி தந்தாள், மோசமான இடத்திலிருந்தாள், பிழையான பாதையில் வந்தாள், பிழையான நேரத்தில் வந்தாள் என வல்லுறவுக்கு நியாயம் சொல்லும் வழக்கம் சாதாரண சமூக பேச்சாடலில் மாத்திரமல்ல, சட்டத்தின் முன் கூட காணப்படுகிறது. இது ஒரு சட்ட வலுவாகவும் எதிரிக்கு சாதகமாக அமைந்த எத்தனையோ வழக்குகளைக் காண முடிந்திருக்கிறது.

எனவே தான் இந்த கற்பொழுக்கம் குறித்தும் பாலுறவு குறித்தும் நிலவுகின்ற விடயங்களை ஆராய்வது அவசியமாகிறது.

பெண்ணின் உயிhpயல் அம்சமான பாலுறுப்புகள் மீதான அதிகாரத்துவத்துக்கு ஆணாதிக்க மரபு வழிவந்த சமூக-பண்பாட்டுக் காரணிகள் முக்கியத்துவம் செலுத்துகின்றன.


ஆண்மை-பெண்மை குறித்த மரபுப் புனைவுகளின் வாயிலாகவும், ஐதீகங்களின் வாயிலாகவும் இது பலமாக வேரூன்றியுள்ளன. இவற்றை எமது கல்வி, தொடர்பூடாக, மத விவகாரங்கள் பாதுகாத்து, வற்புறுத்தி வந்துள்ளன.

தனது கன்னித்தன்மையைப் பாதுகாக்க வேண்டியவளாக பெண் பழக்கப்படுத்தப்பட்­டுள்­ளாள். பாலியல் பற்றிய புரிதல் பெண்க­ளுக்கு மறுக்கப்பட்டதாகவும், வரையறுக்கப்­பட்டதாகவும் ஆக்கப்பட்டுள்ளன. பாலியலா­னது இரகசியத்துக்கும், அந்தரங்கத்­துக்கும் உரிய ஒன்றாகவும் ஆக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாலியல் குறித்த வேட்கைகள், நாட்டங்கள் செயற்கைத்தனமானதாக கற்பிதம் செய்யப்பட்டுள்ளது. பேசாப்பொருளாக வைத்­தி­ருக்­கப்பட்டாலும் கூட அது பெண்களுக்கு மட்டும்தான் என வரையறுக்கப்­பட்டது. பெண்கள் மத்தியில் இவை பேசாப் பொருளாக இருக்கும் வரை அவர்களின் பாலியல் வேட்கைகள் தணிக்கப்படுமென்ற நம்பிக்கை ஆணாதிக்கச் சூழலில் நிலவுகின்றது.

ஒரு தாரமணம், குடும்பம், வம்சாவழி, ஒழுக்க மரபுகள் என்பன தனிச்சொத்துட­மையின் வழிமுறைகள். இதில் ஒரு தார மணமானது தந்தை வழிச்சமூகத்தின் இருப்புக்கு (அதாவது தனது விந்தின் விளைவே­யென்பதை நிறுவுவதற்கு முன்நிபந்­தனையாக திகழ்கிறது.) அவசியமாக இருக்கிறது. குறிப்பிட்ட குழந்தை தனது ஆண்மைத்துவத்தின் விளைவு-வெளிப்பாடு எனக் கருதுகிறது.

எனவே தான் ஆணாதிக்கமானது ”கற்பு” என்பதை பெண்ணின் மீதான விதியாக ஆக்கிய அதே நேரம் ஆணின் ”கற்பு மீறலை” அது தனது ஆண்மையின் வெற்றியாகவும் நிறுவி விட்டிருக்கிறது.

இந்த கற்பொழுக்கமானது வரலாற்று பூர்வமாகவே பெருங்கதையாடலாக சித்திரித்து வரப்பட்டுள்ளது. அதன் விளைவாக இது இன்றும் பலமாக நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கதையாடலின் மத்தியில் விஞ்ஞானபூர்வமான உண்மைகள் வைதீக பிற்போக்கு சக்திகளால் காலாகாலமாக காயடிக்கப்பட்டு வருகின்றன.

பெண்ணின் இந்த கற்பொழுக்கத்துக்கு பெண்ணின் மீதான ”யோனி மைய வாதம்” ஆற்றுகின்ற பாத்திரம் கரிசனைக்குரியது. இது தான் பெண்ணின் மீதான இயற்கையான உயிரியல் ”கொடுமை”. இனப்பெருக்க மையமாக அமைந்திருக்கிற உயிரியல் இயல்பை பெண்ணின் கர்ப்பம் குறித்த பயத்திற்கும் அடிப்படையாக இது ஆகியது. இந்த பயத்தின் அடிப்படையிலேயே ஆண்-பெண் உறவு கட்டமைக்கப்பட்டு குடும்ப அமைப்பு எனும் அதிகாரத்திற்கு ஒடுக்கியது. ”ஒருத்திக் கொருவன்” எனும் சித்தாந்தத்தை பெண்ணுக்கு திணித்தது. இவை கெடாம­லிருக்க ஒழுக்கநியதிகள், கண்காணிப்புகள், விட்டால் போதுமென்ற உடனடித் திருமணங்கள்,

ஆணுறுப்பு லிங்கமாகவும் வழிபாட்டுக்­குரிய ஒன்றாகவும் கருதப்படுகிறது. (இது எப்படி வழிபாட்டுக்கு வந்தது என்பதை பெட்டியில் உள்ள கதையைப் பார்க்க) அதற்கு கோவில் கட்டி கும்பிடுகின்ற அதே நேரம் பெண்ணின் யோனியானது தீட்டு, தூய்மை, துடக்கு, விலக்கு, அசிங்கம், அருவருப்பு, அவமானம் என்கின்ற புனைவுகளையும், அதன் மீதான வெறுப்­பையும் ஏற்படுத்தியுள்­ளது.

பாலுறவு தவிர்த்தால் யோனியை ஒரு வேண்டத்தகாத ஒன்றாகவே ஆணாதிக்க சூழல் கற்பிதம் கொண்டிருக்கிறது. இன்றுள்ள தூஷண வார்த்தைகளைப் பார்த்தால் இதன் விளை­வினை விளங்கிக் கொள்ள முடியும். நிலவுகின்ற தூஷண வார்த்தைகள் அனைத்­துமே பெண்களின் பாலுறுப்புகளைக் குறித்து கேலி செய்கின்றவையாகவே உள்ளன. இதன் மூலம் வேண்டாதவரை அவமானப்படுத்த முடியும் என்கின்ற ஐதீகம் நிலவுகிறது. ஒருவரைத் துன்புறுத்த முடிவு செய்தால் எதிhpக்கு நெருக்கமான பெண்ணின் (தாய், சகோதரி, மனைவி) பாலுறுப்புகள் மீது கேலி செய்தால், அவமானப்படுத்தினால் கோபம் கொள்ளச் செய்யலாம் என்கின்ற ஐதீகமும் நிலவுகிறது.

அதே வேளை இதே யோனி புனிதம் கெடா­மல் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்­புகளும், அவற்றுக்கான விதிகளும் கட்டுப்பா­டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. ஆண் பல பெண்களுடன் கொள்ளும் பாலுறவுத் தொடர்புகள், ஆண்மையின் சிறப்பாகவும் பெண் தனது கணவனைத் தவிர்ந்த எவ­ருடனும் வைத்துக் கொள்கின்ற பாலுறவுத் தொடர்புக­ளினால் அவளது ”கன்னித்தன்மை” புனிதம் கெட்டதாகவும், கற்பிழக்கப்பட்­டதாகவும், நடத்தை கெட்டதாகவும், ஒழுக்க மீறலாகவும் புனை­யுமளவுக்கு கருத்தியல்கள் கட்டமைக்கப்­பட்டுள்ளன.



இன்றும் பாலுறவானது விஞ்ஞான பூர்வமான பரஸ்பர புரிதலுடனான கூட்டுச் செயற்­பாடாக இல்லை. பாலுறவின் போது பெண்ணானவள் வெறும் போகப் பொருள் மாத்திரமே ஆண் விரும்பிய போது ”சகலவற்றையும்” சகித்துக் கொண்டு இசைந்து கொடுக்கும் இயந்திரம் மாத்திரமே.

எனவே இந்த யோனி மையவாதம் தான் யோனியை மையமாகக் கொண்ட பாலுறவுக்கு அப்பால் - எல்லாமே வக்கிரம் என்ற புனைவை­யும் ஏற்படுத்தியது.

எதிர்பாலுறவுக்­கூடாகத்­தான் (retro sexual) பாலியல் இன்பம் கிட்டும் என்கின்ற புனைவுகளும் இதன் வெளிப்பாடே. எனவே தான் பின்னர் புட்ட உறவு, வாய் உறவு மற்றும் ஒரு பாலுறவு வரை எல்லாமே அபத்தமானதா­கவும், வக்கிரம் கொண்டதாகவும், இயற்கைக்கு முரணானதாக­வும், சட்டவிரோதமானதாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டன. இது ஆணின் பாலாதிக்கத்­துக்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது.

மேலும் நிலவுகின்ற சமூக அமைப்பைப் பொறுத்தளவில் தனது சொந்த பாலுறுப்பு தவிh;த்து ஏனையோரின் பாலுறுப்புக்களை அருவருப்பாக பார்க்கின்ற உளவியல் ஆண்களிடம் இருப்பதாக சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு எதிர்மாறாக, பெண்கள் இருக்க கற்பிக்கப்பட்டுள்ளனர். கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக குழந்தைகளுக்கு குண்டி கழுவுவது முதல் கொண்டு ஏனையோரின் உள்ளாடைகளை கழுவுவது மற்றும் குழந்தைகள், பிள்ளைகளின்-ஏன் வீட்டிலுள்ள அனைவரதும் பாலுறுப்புகள் உள்ளிட்ட சுகாதார மருத்துவ விடயங்களில் அக்கறை கொள்வதும், ஏன், சொந்த பாலுறுப்பு மீதான சுகாதார மற்றும் மறு உற்பத்தி குறித்தும் சகல வழிகளிலும் பெண்ணே, பொதுவாக எந்தவித அருவருப்­புக்­குமுள்ளாகாமல் சகிப்புடன் பாலுறுப்பு நலன்களில் ஈடுபாடு கொள்ள கற்பிக்கப்பட்­டுள்ளாள். இப்படியான பொறுப்­பு­க­ளி­­லிருந்து விலகி வரும், ஆணாதிக்கத்திடம் இப்படிப்­பட்ட அருவருப்புகள், வெறுப்­புணர்வுகள் இருப்பது குறித்து பின்னென்ன ஆச்சரியப்­பட இருக்கிறது.

எனவே தான் இந்த கற்பு, கன்னித் தன்மை, போன்ற மரபான ஐதீகங்கள் இன்று பாலியல் வல்லுறவை விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு கொண்டு சென்று விடுகிறது. சமூகத்தில் உள்ள பாலொடுக்­குமுறைகளை இனங்காணாமல் செய்து விடுகிறது. குடும்பத்தில் கணவனால் பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்படு­கின்ற வேளைகளில் அது அவனின் உரிமையாக கொள்ளப்படுகிறது. பெண்கள் அதனை சகிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்­படுகிறது. இருக்கின்ற ஆணாதிக்க கட்டமைப்புடன் சமரசம் செய்து கொள்ளச் செய்துள்ளது. இந்த கட்டமைப்பின் மீதான மீறல் மேற்கொள்ளப்­படுமாயிருந்தால், மீறியவளை நடத்தை கெட்டவளாக ஆக்கிவிட்டுள்ளது.

பாலியல் குறித்த இந்தப் புனைவுகளைத் தகர்ப்பதே பெண் விடுதலையை சாத்தியமாக்கும்.

இன்றைய பெண்கள் மீதான வன்முறைக­ளில் பாலியல் வன்முறையானது அதிகரித்து வருவதானது அதிகாரமற்ற பாலாரின் மீதான ஆண்களின் கையாலாகாத்தனத்தையே குறிக்கிறது. அதிகாரத்துவத்தின் அடக்கு­முறைக்குள்ளாவதால் அதிகாரம் முதலில் அவசியம். இன்று இந்த அதிகாரத்துக்கான ஒரு பயணத்தையே மேற்கொள்ள வேண்டியிருக்­கிறது. ஒரு புரட்சிகர சமூக மாற்றத்துக்கான பயணத்தில் தங்களின் விடுதலைக்கான பாத்திரத்தை ஆற்றுவது, விடுதலையில் அக்கறையுள்ள அனைத்து பெண்களினதும் கடமை.

AddThis Social Bookmark Button


போரின் கருவியாக பாலியல் வல்லுறவு!


என்.சரவணன்

போரின் போது முதலாவது பாதிக்கப்படுவது பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்று ஒரு பழமொழியுண்டு. அனைத்து சமூக அமைப்பிலும் பாரிய நெருக்கடிநிலை தோன்றுகிற வேளை விளிம்பு நிலையினரே முதலாவதும், அதிகளவிலும் பாதிக்கப்படுவதை பல்வேறு சமூகவியலாளர்கள் மீள, மீள சுட்டிக்காட்டி வந்துள்ளனர்.

அந்தவகையில் பெண்கள் விளிம்புநிலை சக்தியினர் தான். போரின் போது பாதிக்கப்படுபவர்களில், பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், அங்கவீனர்கள் என்போர் அதிக கரிசனைக்கும், கவனத்துக்கும் உள்ளாவது இந்த அடிப்படையில் தான். இதனை நிறுவுவதற்கு சுனாமி கூட நமக்கோர் நல்லதொரு உதாரணம்.

பஞ்சம், பட்டினிச்சாவு, நோய், இயற்கை அனர்த்தம், போர் என அத்தனைக்கும் இது பொருந்தும்.


போரின் போது பெண்கள் இன்னும் பிரேத்தியேகமான முறையில் பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறார்கள். பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது உலக வரலாறு முழுவதும் இடம்பெற்றுத்தான் வருகின்றன. நமது சங்க இலங்கியங்கள் கூட இதனை பதிவு செய்திருக்கின்றன.


இன்றைய நிலையில் சிங்கள பௌத்த பேரினவாத கட்டமைப்பில், தமிழ் மக்கள் குறித்தும் இலங்கை வரலாறு குறித்தும் கட்டமைக்கப்பட்டுள்ள கருத்தியல்­களை மாற்றியமைக்காமல் எதையும் செய்ய முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்­டது.

இந்தப் பேரினவாதக் கட்டமை­ப்பை வளர்த்தெடுக்க எந்த ஆதிக்க அரசியல் சக்திகள் காரணமாக இருந்தனவோ இன்று அதே சக்தியானது, தானே, விரும்பி­னாலும் கூட தான் வளர்த்துவிட்டுள்ள கட்டமைப்­பானது அப்படிப்பட்ட ஒரு தீர்வுக்கு இடமளிக்கப் போவதில்லை என்பதையும், அது ஆதிக்க சக்திகளின் இருப்புக்கே உலை வைத்துவிடும் என்பதும் அம்பலப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமாதான முயற்சி..., பேச்சுவார்த்தை..., போர் நிறுத்தம்..., தீர்வு... என்பவற்றை எதிர்க்க சிவில் சமூகமே தயாராக்கப்பட்டு வருவதை தென்னிலங்­கையின் அண்மைய நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. இந்த நிலையில் அரசு விரும்பியோ விரும்பாமலோ தனது இருப்புக்காக போர்க் கெடுபிடி நிலையை பேணி வருகிறது. அதற்காக எவ்வளவு பெரிய இழப்புகளுக்கும் முகம் கொடுக்க சிவில் சமூகம் பழக்கப்பட்டு - பழக்கப்படுத்தப்பட்டு வருகிறது. தென்னிலங்கையில் தொழிலாளர்க­ளின் வேலை நிறுத்தம், பொருள் விலையு­யர்வு, தீர்வைகளின் அதிகரிப்பு, வேலையில்லா திண்டாட்டம் என்பவ­ற்றைக் கூட போரின் பேரால் நியாயப்­படுத்துவதை எதிர்த்து பெரிய எதிர்ப்பு ”நடவடிக்கைகள்” எதுவும் இல்லை.



அரசாங்கங்களின் இருப்புக்கான அரசியல் தந்திரோபாய நடவடிக்கைகளில் ஒன்றாகவே போர்ச்சூழல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. போரின் போது படையினரின் உளப்பலத்தை பாதுகாப்பதும், உற்சாகத்தை பேணச் செய்தலும் அரசின் கடமையாகிறது. படையினரின் உயிரிழப்புகள், இராணுவத்தினாரின் உயிரிழப்­புகள், பொருளிழப்புகள், முகாம் இழப்­புகள் எனபனவற்றால் படையிலிருந்து வெளியேறு­வோரின் தொகை அதிகரித்து வந்த அதே நேரம் படைக்கு புதிதாக சேருவோரின் தொகை குறைந்துக் கொண்டே வருகிறது. தென்னிலங்­கையில் சிங்கள இளைஞர்கள் பலர் தமது வீடுகளில் பெற்றோரை மிரட்டு­கின்ற வார்த்தைப் பிரயோகமாக ”படையில் போய் சேர்ந்து விடுவேன்” என்பது சர்வசாதாரணமாக ஆனது.

இந்த நிலையில் இருக்கின்ற படையி­னரை தொடர்ந்து தக்க வைக்கவும், புதிதாக படைக்குச் சேருவதை ஊக்குவிக்கவும் பல வழிமுறைகளை அரசு கையா­ள்கிறது. படையில் இணைவோ­ருக்­கான சம்பள, சலுகைகள் அதிகரிப்பு அவற்றில் முக்கியமா­னவை. இது போன்ற வழிமுறைகளில் ஒன்றே படையினரின் போர்க்கால குற்றங்களை பொருட்­படுத்தாமை என்பது.

அந்த போர்க்கால குற்றங்களில் பாரிய ஒன்றாக தமிழ்ப் பெண்களின் மீதான பாலியல் வல்லுறவு நிகழ்கிறது. இது வெளிப்படையாக பாலியல் இச்சை சார்ந்ததாக காட்டப்பட்டாலும் அதற்கும் அப்பாலான பொருண்­மைகள் உள்ளன.

இதற்கான உள்ளார்ந்த அனுமதியும், ஆசீர்வாதமும் படைத் தரப்பில் வழங்கப்பட்­டுவருவதை சம்பவங்கள் பல நிரூபித்துள்ளன. வெளியில் செய்தி கசியாமல் எதனையும் செய்யலாம் என்கின்ற நிலைப்பாடு இராணுவ வட்டாரத்தில் இருக்கிறது.


1994இல் பதவிக்கு வந்த பொ.ஐ.மு. அரசாங்கம் அதே ஆண்டு இறுதியிலிருந்து நடத்திய பேச்சு வார்த்தைகள் 1995 ஏப்ரலில் முறிவடைந்தது. 1995 ஒக்டோபரில் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்­கையின் மூலம் யாழ் குடா நாட்டைக் கைப்ப­ற்றிய அரசாங்கம் அது தொடக்கம் யாழ் குடா நாட்டை ஒரு மூடுண்ட பிரதேச­மாகவே ஆக்கி வந்தது. வெளியுல­கத்துக்கு அங்கு இராணுவத்தைக் கொண்டு சிவில் நிர்வாகத்தை நடாத்தி வருவதாகவும் பிரச்சாரப்ப­டுத்தியும் வந்தது.

போரினால் அரசு சந்தித்து வந்த தொடர் தோல்விகளினால் படை­யினரின் உளநிலை வீழ்ச்சி கண்டிருந்தது. இதேவேளை மூடு­ண்ட பிரதேசமாக இருந்த யாழ் குடா நாட்டில் பல நூற்றுக்கணக்­கானோர் காணாமல் போனோர்­கள். அடிக்கடி ஆங்காங்கு சடலங்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. காணாமல் போவோரின் தொகை அதிகரித்துக்கொண்டே சென்றது.

இப்படிப்பட்ட நிலையில் தான் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருந்தன. வடக்கு கிழக்குப் பகுதிகளில் படையினரின் கட்டுப்­பாட்டுப் பிரதேசங்களில் படையின­ராலேயே மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் குறித்த உண்மைகளை வெளிக் கொணர்வது எவருக்கும் அவ்வ­ளவு இலகுவான காரியமாக இருக்கவில்லை. அரச பயங்கரவாதம் சட்டபூர்வமான முறையில் அவசரகால சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்றவற்றினூ­டாகவும், ஊடகத் தணிக்கை போன்றவற்றினூ­டாகவும் மேற்கொள்ளப்பட்டது. அச்சட்டங்கள் மக்களின் மீதான இராணுவ அட்டுழியங்க­ளுக்கும், படுகொலைகளுக்கும், பாலியல் வல்லுறவுகளுக்குமான அனுமதிப்பத்திர­மாகவே அமைந்தது.

1971 ஏப்ரல் கிளர்ச்சியின் மூலம் ஜே.வி.பி.யை அடக்குவதாக கூறிக்கொண்டு சிங்கள இராணுவம் தனது சொந்தத் தேசத்து சிங்கள யுவதிகளையே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர். மனம்பேரி எனும் ஜே.வி.பி. இளம் பெண்ணின் கதை மட்டுமே மேற்பூச்சுக்­காக வழக்கு நடாத்தி சம்பந்தப்பட்ட படையின­ருக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஜே.வி.பி.யை அடக்கவென சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடம் உதவி கோரப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை வந்தடைந்த இந்திய இராணுவமும் இந்த காலத்­தில் பாலியல் வல்லுறவினை மேற்­கொண்டது தொடர்பாக பதிவுகள் பெரிதாக வரவில்லை. ஆனால் அன்றைய ஜே.வி.பி.க்கு தலைமை தாங்கிய பலர் இன்றும் அந்தக் கொடு­ர­ங்­களை நினைவு கூர்ந்த வண்ணமுள்ளனர்.

அதே இந்திய இராணுவத்தை 1987ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பெண்கள் மாலையிட்டு, திலகமிட்டு வரவேற்றபோது நாளை இவர்கள் தம்மையும் தமது பிள்ளைகளையும் கொன்றொழிக்கப்போகிறார்கள் என்றோ தமது பெண் பிள்ளைகளை பாலியல் வன்முறைக்­குள்­ளாக்கப் போகிறார்கள் என்பதையோ அறிந்திராதிருந்தனர்.

இந்திய இராணுவ நுழைந்ததுமே இதனை தொடங்கி விட்டனர். 1987இல் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலத்திலேயே அதிக­மான பாலியல் வல்லுறவுச் சம்ப­வங்கள் பதிவாகியுள்ளன. இராணுவ நடவடிக்கையின் அங்கமாகவே இது மேற்கொள்ளப்பட்டதென பல நூல்­க­ளிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்திய இராணுவம் யாழ் பல்கலைக் கழகத்தினுள் புகுந்து தமிழ் மாணவிகளை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி அவர்களின் பாலுறுப்புகளை சிதைத்து பின் கொன்று புதைத்திருந்தனர். பின் அச்சடலங்கள் அப்புதைகுழிகள் தோண்டியெடுக்கப்பட்டன.

உளவியலாளர் தயா சோமசுந்தரத்தின் Scarred Minds எனும் நூலில் இது பற்றிய பல தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.


மூன்று இந்திய இராணுவத்திர் துப்பாக்கி முனையில் பாலியல் வல்லுறவு புரிய முற்பட்டபோது அவர்களை நோக்கி -என்னை இப்படி செய்யாதீங்கோ! என்னை சுட்டுக்கொல்லுங்கோ- என கதறியழுத சம்பவமும். திருநெல்வேலியில் ஒரு பெண் ஓடிப்போய் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ய முயற்சித்தமை போன்ற சம்பவங்க­ளையும் அந்நூலில் பதிவாக்கியிருக்கிறார்.

இது தவிர 1968இல் வியட்நாமில் அமெரிக்காவுக்கு ஒரு மை லாய் கிராமம் போல, 1989இல் இந்திய இராணுவத்துக்கு ஒரு வல்வை படுகொலையை குறிப்பிடுவது வழக்கம். 1989 ஓகஸ்ட் 2, 3, 4 ஆம் திகதிகளில் வல்வெட்டித்­துறையையும், அதனை அண்டிய ஊர்களுக்கும் ஊரடங்குச்சட்டம் பிறப்பித்து ஆயிரக்கணக்­கான வீடுகள் கடைகளை உடைத்தும் எரித்தும் சேதத்துக்கு உள்ளாக்கிய­துடன், பெண்கள், வயோதிபர், சிறுவர்கள் என 63 பேரை வெட்டியும், சுட்டும் தாக்கியும் படுகொலை செய்ததுடன், 15 திருமணமான பெண்களையும், 50க்கும் மேற்பட்ட இளம் பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர்.

உலகம் முழுவதும் இது தான்....
பொதுவாக போர்க்காலங்களில் பாலியல் வல்லுறவுக்கூடாக ஒரு சமூகத்தை அவமானத்துக்குள்­ளாக்குள்ளாக்கலாம் என்று எதிhpத் தரப்பு நம்புவது வழக்கம். இது ஹிட்லரின் நாசிப் படைகள் தொடக்கம் அண்மைய பொஸ்னிய-சேர்பிய போர் வரை காணமுடியும். பொஸ்னிய இனத்­தின் தூய்மையைக் கெடுக்க வேண்டுமானால் அவ்வினத்தின் பெண்களின் மீது பாலியல் வல்லுறவு கொண்டு இனக்கலப்பு செய்து விட்டால் அது நடக்கும் என சேர்பியர்கள் கருதினார்கள். அதன் விளைவாக பொஸ்னியப் பெண்களை சிறைப்படுத்தி அவர்க­ளுக்கென்று தனியான முகாம்களை அ­மைத்து (Rapd Camps) அவர்களை சேர்பியர்கள் சென்று மாறி மாறி பாலியல் வல்லுறவு­க்குள்ளாக்கி அவர்களை கர்ப்பம் தரிக்கச் செய்து பிள்ளை பெற செய்தனர். அதன்பின்னர் பிறந்த அப்பிள்ளை என்ன இனம் என்று கேலி செய்தனர். நூற்றுக் கணக்கான பெண்களுக்கு இந்த கதி ஏற்பட்டது. இந்த இனக்கலப்புக்கூடாக இனக்கலப்பை செய்துவிட்டதாகவும், அப்பெண்களுக்கு பிறந்தவர்கள் எவரும் இனி பொஸ்னியர்களாக அறிவித்துக் கொள்ள முடியாதென்றும், தான் இனக்கலப்பை செய்துவிட்டதாகவும் அறிவித்துக்கொண்டார்கள். அவ்வினத்தின் தூய்மையைக் கெடுத்து விட்டதாகவும், களங்கப்படுத்தி விட்டதாகவும், புனிதம் கெடச் செய்து விட்டதாகவும் பொஸ்னி­யர்களுக்கு அறிவித்தார்­கள். 1992 அளவில் 20ஆயிரத்துக்­கும் மேற்பட்டபெண்களும், இளம் யுவதிகளும் இதன்போது பாலியல்வல்லுற­வுக்கு உள்ளாக்­கப்பட்டார்கள். பொஸ்னியாவில் நிகழ்ந்தது பெண்களின் மீதான வல்லுறவு அல்ல. ஒட்டுமொத்த மனித்தத்தின் மீதான களங்கம் (“The war on women in Bosnia was truly the rapd of humanity”2)

போர்க்காலங்களில் பெண்களை கைது செய்வது, சித்திரவதைக்கு உள்ளாக்குவது, குறிப்பாக பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்குதல் அன்று தொடக்கம் இன்று வரை நிகழ்ந்த வண்ணமே உள்ளது.

போர் நடந்த பங்களாதேஸ், கம்போடியா, சைப்பிரஸ், ஹைட்டி, லைபீரியா, சோமாலியா, உகாண்டா போன்ற நாடுகளில் இச்சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.



1990இல் 5000க்கும் மேற்பட்ட குவைத் பெண்கள் ஈராக்கிய துருப்புக்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

ருவாண்டாவில் 5 லட்சம் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளா­னார்கள். அல்ஜீரியாவில் சில கிராமங்களில் புகுந்த ஆயுததாரிகள் ஒட்டுமொத்த கிராமத்து பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உள்­ளாக்­கினர். சில தரவுகளின் படி அங்கு 1600 இளம் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்திருக்­கின்றனர்.

இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது 1937இல் ஜப்பான் துருப்புக்களால் சீனாவின் நான்கின் எனும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட வேளை அங்குள்ள 20,000க்கும் மேற்பட்ட சீனப்பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதற்காக உலகப்போhpன் பின்னர் விசாரணை நடந்தது.

ருவாண்டாவில் போhpல் தப்பிய இளம் அப்பாவிப் பெண்களை பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்த ஆயுததாரிகள் பணிக்கப்பட்டனர். இவ்வாறு கர்ப்பம் தாpக்கப்பட்ட பெண்கள் அவர்களது குடும்பங்களிலும், சமூகத்திலும் விரும்பத்தகாதவர்களாக ஆனார்கள். சிலர் தற்கொலையும் செய்து கொண்ட சம்பவங்க­ளும் பதிவானது. இவ்வாறான செயற்பாடுக­ளின் மூலம் அப்பெண்யையும், அப்பெண் சார்ந்த குடும்பத்தையும், அவர்களின் இனக்குழுமத்தின் உளப்பலத்தை குறைப்பதும், இனத்தூய்மை மீதான மாசுபடுத்தலும், அவர்களின் அடையா­ளத்தை உருக்குலைப்­பதும், அவர்களின் கலாச்சார நம்பிக்கைகளை கேலிக்குரியதாக்­குவதும் நோக்கமாக இருந்திருக்கின்றன. இவை எதிரிப்படைத் தலைமைகளால் ஊக்குவிக்கப்பட்டுமிருக்­கின்றன.

இலங்கையில் அனுராதபுரத்தில் படையி­ன­­ரை நம்பியே மிகப் பாரிய அளவிலான பாலியல் தொழில் விடுதிகள் நடத்தப்படுகின்­றன. எல்லைப்புக் கிராமங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல பெண்கள், குறிப்பாக கணவரை இழந்தவர்கள் பலர் இதில் ஈடுபடுத்­தப்­பட்டுள்ளனர். இவ்வாறான விடுதிகள் இராணுவ அதிகாரிகள் சிலரது சொந்த விடுதி­களாகவும் உள்ளன. பெண்கள் அமைப்புக்கள் பலவற்றின் அறிக்கைகளில் இந்த விடுதிகள் குறித்து சுட்டிக்காட்டப்­பட்டுள்ளன.

இப்படி யுத்த காலங்களில் எதிரித் தரப்பின் பெண்கள் படை­யினருக்கு விருந்தாக ஆக்கப்படு­வதும் பலருக்­கான பாலியல் போகப்பொருளாக, பாலுறவு இயந்திரமாக ஆக்கப்படுவ­தும் அங்கு மட்டுமல்ல இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பானியப் படைகள் கிழக்காசிய நாடுகளில் புரிந்த கொடுமையும் இவை தான். அவை நீண்ட காலமாக வெளித் தெரியாமல் இருந்து மிக அண்மையில் தான் பெண்களை பாலியல் அடிமைக­ளாக முகாம்களில் வைத்திருந்த விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. ஜப்பான் அன்று இந்தோ­னேசிய, பிலிப்­பைன்ஸ், மற்றும் கொரியா உள்ளிட்ட நாடுகள் பலவற்றில் பெண்கள் பலரை தடுத்து வைத்து படையினரின் பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்த சம்பவங்கள் உலகையே உலுக்கி­யது. எதிரி நாட்டுப் படையினர் மீது நடத்தப்­பட்டு வந்த இத்தகைய மனிதநேயமற்ற சம்ப­வங்­களே இலங்கையிலும் நடந்து வருகின்­றன.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் கூட இந்தோ­னேசியாவில் சுகர்னோ அரசாங்கத்­துக்கு எதிரான கிளர்ச்சியின் போது சீன நாட்டைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்­ளாக்­­கப்பட்ட செய்தி இன்று உலகப்புகழ் பெற்றவை.
ஸ்ரீ லங்கா அரசின் யுத்த அணுகுமுறைகள் எதிரி நாட்டுடனான யுத்தமென்பதையும் தமிழ்ப் பெண்கள் தங்கள் நாட்டுப் பெண்களில்லை வேற்று நாட்டுப் பெண்களே என்பதையும் நமக்கெல்லாம் தெளிவு­றுத்தியதும் இதே அரச படை தான். சிங்கள இராணுவத்திற்கான சிங்கள இராணுவ ஆட்சேர்ப்பு, தமிழ் மக்கள் மட்டும் தேடி வேட்டை­யாடப்படல், தமிழர் பகுதிகளின் மீதான குண்டுவீச்சுக்கள், அழிப்புக்கள் என்பவற்றின் வெளிப்­பாடுகள் அத்தனையும் இது சிங்களப் படை தான் என்பதை நிரூபித்தது. எனவே ஸ்ரீ லங்கா அரச படையும் வேற்று நாட்டுப் படையெனும் உணர்­வும், ஆக்கிரமிப்பு இராணுவம், எதிரிப் படை என்கின்ற மனப்பதிவுக்கும் தமிழ் மக்கள் எப்போதோ உள்ளாக்கப்பட்டுவிட்டனர்.

ஸ்ரீ லங்கா படையை அவ்வாறு ”சிங்களப் படை”, ”எதிரிப் படை” யென்று சொல்வதற்கு முழுத் தகுதியையும் படிப்படியாக குறுகிய காலத்தில் அடைந்தது இவ்வாறுதான்.

(சிங்களப் படையென்ற சொல் இனவா­தத்தை வெளிப்படுத்துவ­தாக விமர்சிக்கப்பட்ட காலமொன்று இருந்தது. ஆனால் சிங்களவ­ர்களை மட்டுமே கொண்ட படையாக­வும் எதிரிநாட்டின் மீது யுத்தம் செய்வது போல யுத்தக் குற்றங்களில் ஈடுபடுவ­தாலும் இப்பதம் பொறுத்தமானதே)

எனவே இப்படிப்பட்ட சிங்க­ளப் படையினரால் மேற்கொள்ள­ப்பட்டு வருகின்ற பாலியல் வல்லுறவுகள் தமிழ் மக்களின் இனத்துவத்தை அவமான­ப்படுத்த பயன்படுத்­துகின்ற ஒன்றாகவே கொள்ள முடிகிறது.

ஆனால் தற்செயலாக கிருஷா­ந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவுக்கு­ள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்­டதும், கிருஷாந்தியைத் தேடிச் சென்ற அவரது தாயார், சகோதரன், அயலவர் ஆகியோரையும் கொன்று புதைத்த சம்பவம் தற்செயலாக அம்பலத்துக்கு வந்ததும் (கிருஷாந்தி குடும்பத்தின் வர்க்கப்பின்னணி காரணமாக அதற்கு தொடர்புசாதனங்கள், பெண்கள் அமைப்புகள், சட்ட உதவிகள் வாய்ப்­பாக அமைந்­ததால்) அது உலக அள­வில் அரசை அம்பலத்துக்கு கொண்டு வந்தது.

தவிர்க்க இயலாமல் சிங்கள அரசு, தாம் போர்க் குற்றங்க­ளுக்கு எதிராக எப்போதும் உறுதியாக இருப்பதாக பிரச்சாரப்படுத்துவதற்­காக கிருஷாந்தி வழக்குக்கு அரசினால் முக்கியத்துவமும் கொடுக்கப்பட்­டது. அதன்படி 20 மாதங்களாக நடந்த கிருஷாந்தி வழக்கின் தீர்ப்பாக 6 பொலிஸாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை சாதகமாக்கியபடி அரசு இன்றும், பாதிக்கப்படும் பெண்கள் மீதான தனது காpசனையை பிரச்சாரப்படுத்தி வருகி­றது. இந்த பிரச்சாரங்களின் முன்னால் ஏனைய சம்பவங்கள் அனைத்தையும் மூடி மறைத்து வருகிறது. ஏனைய சம்பவங்களில் பாதிக்கப்­பட்டவர்­கள் சமூக அளவிலும் அந்தஸ்து­டைய­­வர்­கள் அல்லர்.

இன்று வெளிக் கொணரப்ப­டுகின்ற சம்பவங்கள் அனைத்துமே பாதிக்கப்­பட்ட பெண் செத்தால் மாத்திரம் தான் சாத்தியமாகிறது. பெண்கள் ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த பெண்ணியவாதியான ஷாமினி பெர்ணாண்டோ இது குறித்து அப்போது கருத்துதெரிவிக்கையில் ”ஒரு பெண் படையினரால் தனக்கு ஏற்பட்ட அவலத்தை சட்டத்தின் முன் கொண்டு வர வேண்டு­மெனில் நிச்சயம் சாகத்தான் வேண்டுமா,” என வினவுகிறார். உண்மையில் இன்று வழக்கு தொடரப்­பட்டிருக்கும் சொற்ப சம்பவங்களைத் தேடிப்பார்த்தால் அவை பாலியல் வல்லுறவின் பின்னர் கொலை செய்யப்பட்டவர் குறித்தானதாகத் தான் இருக்கின்றது. கிருஷாந்தி, ராஜினி, கோணேஸ்வரி போன்றன நல்ல உதாரணங்கள்.

இதே வேளை இது வரை சிங்களப் படையினரால் மேற் கொள்ளப்பட்டு வந்திருக்­கிற பாலியல் வல்லறவு சம்பவங்கள் அனைத்­திலும் பெண்கள் அதிக சித்திரவதைக்குள்­ளாக்­கப்பட்­டுள்ளனர்.

ஈழப்போராட்ட வரலாற்றில் அதிகளவு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானது சந்திரிகா என்கிற பெண்ணொருவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தான் (1994-2005) என்பது பதிவாகியிருக்கிறது. சர்வவல்லமை பொருந்திய நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகவும், முப்படைகளின் தளபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் சந்திரிகா தான் இருந்தார் என்பது இங்கு கவனிக்கவேண்டிய ஒனறு.

1996 இல் மாத்திரம் 150 தமிழ் பெண்கள் படையினரின் பாலியல் வதைக்கு உள்ளாக்கப்­பட்டதாக சீனப்பத்திரிகையொன்று அறிக்கை வெளியிட்டது. (South China morning Post, 11 January 1997)

97 ஒக்டோபர் 16 அன்று அம்பாறையில் பொலிஸாரும் படையி­னரும் தங்கநாயகி எனும் பெண்ணை கூட்டாக பாலியல் வல்லுறவு கொண்டு விட்டு அப்பெண்ணின் பெண்குறியை வெட்டி சின்னாபின்னப்படுத்தி விட்டே சென்றனர். அதே போல 97 மே 17 அம்பாறையில் கோணேஸ்வhp பாலியல் வல்லு­றவுக்குள்ளாக்கப்பட்ட பின்னர் கோணேஸ்வ­ரியின் பெண்குறியில் கிரனைட் வைத்து சிதறச்செய்தனர். பெரும்பாலான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களின் பின் இறுதியில் கொலை புரிந்து வந்திரு­க்கின்றனர். இதன் மூலம் சகல சாட்சிகளையும் இல்லாது போய்­விடுமென்றே சிங்களப் படையினர் நம்புகின்றனர்.

இதை விட இது வரை காலம் போhpன் போது கைது செய்யப்­பட்ட பெண் புலிகள் பலரை பாலி­யல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்­டமை குறித்த சம்பவங்கள் 94க்கு முன்னர் அதிகளவு தகவல் கிடைத்திருந்தன. ஆனால் உயிர்விடும் தறுவாயில் பிடிக்கப்­பட்ட பெண் போராளிகளை நிர்வாணப்­படுத்தி பாலுறுப்­புகளில் போத்தல்­களாலும், கம்பிகளாலும் சேதப்படுத்­தியதை நிரூபிக்கின்ற புகைப்படங்­கள் எமக்கு கிடைத்த போது மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானோம். குறிப்பிட்ட தாக்குதல் சம்பவம் முடிந்ததும் மரணமுற்ற பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி காட்சிப்படுத்­தப்பட்டதை தொலைக்காட்சி செய்திக­ளிலும் காட்டப்பட்டது. அவை பற்றிய புகைப்படங்களும் கிடைத்திருக்கின்றன.

இதன் மூலம் எதிர்பார்க்கப்ப­டுவது என்ன? குறிப்பிட்ட சமூக­த்தை அவமானப்படுத்தி விட்டதன் வெற்றிக் களிப்பையல்லவா? ஏற்கெனவே சமூகத்தில் ஒருவர் தனக்கு வேண்­டாத இன்னொரு­வரை அவமான­ப்படுத்த வேண்டு­மென்றால் அவ­ருக்கு கிட்டிய பெண்ணை வல்லுற­வு­க்குள்ளாக்கு­வேன் என்று (வழக்கிலுள்ள துஷனம்) கூறி­னாலே மற்றவர் ஆத்திரப்­படுவார் அல்லவா? அப்படிப்பட்ட வெளிப்பாடொ­ன்றே இந்த நிர்வாணக் காட்சிப்ப­டுத்தலும்.

”தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடமி­ருந்து மீட்டெடுப்பதற்காக நடத்தப்படும்” சமாதான யுத்தத்தின் மறு பக்கம் எவ்வளவு கோரமானது என்பதைக் காட்ட தமிழ் மக்களுக்கு எதிரான இந்த சம்பவங்கள் போதுமானது. அரசாங்கத்­தின் சர்வதேச பிரச்­சாரங்கள் சமீப காலமாக தோல்வியடைவதற்கு ஒரு காரணம் போர்க்கால கொடுமை­களின் அத்தனை விபரிதங்களும் எல்லைத்தாண்டி போகுமளவுக்கு அதிகாரித்திருப்பதே.

அரசு இவ்வாறான இம்சை­களின் வாயிலாக தமிழ் மக்களை பணிய வைத்து அரசு தரும் தீர்வி­னை ஏற்கச் செய்கின்ற நடவடிக்­கையாக, போரின் கருவி­யாக, வதையின் கருவியாக, பாலியல் வல்லுறவு தொடர்ச்சியாக பாவிக்கப்­பட்டு வருகிறது. அரச பயங்கரவாதத்தின் உச்ச வடிவம் இது தான். இது இனிமேல் தொட­ராது என்பதற்கான உறுதியை எவரும் தந்துவிடமாட்டார்கள்.

AddThis Social Bookmark Button




மனம்பேரி:
ஒரு அழகிய போராளியின்
25வருட நினைவுகள்



என்.சரவணன்

(இக்கட்டுரை ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சியான 1971 கிளர்ச்சியின் 25 வருடங்கள் பற்றிய நினைவு கூரல் நாடெங்கிலும் நடந்து கொண்டிருந்த வேளை அதில் கொல்லப்பட்ட மனம்பேரியை நினைவு கூருகிறது. இக்கட்டுரை எழுதுவதற்கென்று முன்னாள் ஜே.வி.பி.யின் உறுப்பினர்களுடன் கதிர்காமத்திலுள்ள மனம்பேரியின் வீட்டுக்குச் சென்று வீட்டாருடனும் உரையாடினேன். கதிர்காமத்தில் மனம்பேரி கொல்லப்பட்ட இடத்தையும் சென்று பார்வையிட்டேன். மனம்பேரி வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான எலடினையும் போய் சந்தித்தேன். அது தவிர 71 கிளர்ச்சி பற்றி விசாரணை செய்த விசேட நீதிமன்ற நீதிபதி ஏ.சி.அலஸ் எழுதிய நூலில் இருந்த தகவல்கள் சில கட்டுரை இக்கட்டுரைக்கு உதவிற்று. மேலும் மனம்பேரி வழக்கு இடம்பெற்ற (1973 - மே) காலப்பகுதியில் வெளியான பத்திரிகைகளை தேசிய சுவடிகூடத் திணைக்களத்தில் சில நாட்கள் இருந்து திரட்டிய தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இக்கட்டுரை தயாரிக்கப்பட்டது.)

இலங்கையில் முதன் முதலில் ஆயுதப் போராட்டத்தை முன்­னெ­டுத்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணி­யினர். 1971 ஏப்ரல் கிளர்­ச்சி என அழைக்கப்­பட்ட இது அரசாங்கத்தின் கொடுர ஒடுக்குமுறையி­னால் அடக்கப்­பட்டது. இக்காலப் பகுதியில் கொல்லப்பட்ட ம.வி.மு. பெண் போராளி மனம்­பேரி பற்றி இந்த இருபத்­தைந்து வருட நினை­வில் சில குறிப்புகள்.

அவள் கொல்லப்பட்டு 25 வருடங்­கள். 20,000க்கும் மேற்பட்ட அவளின் தோழர்கள் கொல்லப்­பட்டு 25 வருடங்கள். அவளையும் அவளது தோழர்களையும் கொன்றழித்த அந்த அரசமைப்பு மட்டும் இன்னமும் வாழ்கிறது. அவர்களது போராட்டம்...?

1971 ஏப்ரல் கிளர்ச்சியின் போது அரச படையினால் கொல்­லப்பட்ட பெண் போராளிகளில் அவளும் ஒருத்தி. இருப­தா­யிரத்துக்கும் மேற்ப்பட்ட இளம், ஆண், பெண் போராளி­களை அரச யந்திரம் கொன்றொழித்தது. ஆனால் அத்த­னைக்கும் நியாயம் கற்பித்த அரசு, ஒரே ஒரு கொலையை மாத்திரம் படையினரின் அதிகார துஷபிரயோகச் செயல் எனக் கூறி கண்துடைப்புக்காக விசாரணையை நடத்தியது. அவ்விசாரணை தான் பிரேமவதி மனம்பேரியின் கொலை விசாரணை.

இதிலுள்ள இன்னொரு முக்கிய அம்சம் என்னவெனில் படையினருக்கு எதிரான விசாரணையொன்றில் அவர்களு­க்கு தண்டணை வழங்கப்பட்ட விசாரணையும் இதுவொன்றே.

கதிர்காமத் தாக்குதல்.

1971 ஏப்ரல் 5ஆம் திகதி ஜே.வி.பி.யினர் (மக்கள் விடுதலை முன்னணி) திட்டமிட்டபடி நாடெங்கிலும் உள்ள பல பொலிஸ் நிலையங்களை நள்ளிரவில் ஒரே நேரத்தில் தாக்கினர். யாத்திரைப் புகழ் பெற்ற கதிர்காமத்தில் அமைந்­து­ள்ள பொலிஸ் நிலையமும் இதே நேரத்தில் தாக்கப்பட்டது. இதன் போது இரண்டு ஜே.வி.பி. உறுப்பினர்கள் கொல்லப்­பட்டனர். எனினும், தாக்குதல் மறுநாள் 6ஆம் திகதியும் இடம் பெற்றது. கதிர்காமப் பொலிஸார் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் பின்வாங்கியோடினர்.

இதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் நாட்டின் கிளர்ச்சித் தளங்களுக்கு அனுப்பப்பட்டனர். கதிர்காமத்தில் லெப்டினன்ட் விஜேசூரிய தலைமையிலான குழுவொன்று ஏப்ரல் 15ஆம் திகதியன்று முகாம் அமைத்தது. இம்முகாம் இ.போ.ச.வுக்கு சொந்தமான ஓய்வு நிலையத்திலேயே அன்று அமைக்கப்பட்டிருந்தது. இம்முகாம் அமைக்கப்பட்டதன் பிறகு கதிர்காமப் பொலிஸ் நிலையமும் புனரமைக்கப்பட்டது.

இம்முகாமை அமைத்தவுடனேயே லெப்டினன்ட் விஜேசூரிய முதல் வேலையாக கிளர்ச்சியாளர்களை வேட்டையாடுதல் எனும் போர்வையில் கதிர்காமத்தில் பல பெண்களைக் கைது செய்தும், கடத்தியும் கொண்டு வந்து முகாமில் தடுத்து வைத்ததுதான். ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி மனம்பேரியின் வீட்டுக்குச் சென்று அவளையும் கடத்திச் சென்றனர்.
அழகு ராணி மனம்பேரி

பிரேமவதி மனம்பேரிக்கு அப்போது வயது 22. ஜே.வி.பி.யின் ஐந்து வகுப்புக்களையும் ஆர்வமாக முடித்தவள். கிளர்ச்சியின் போது கதிர்காமத்தில் பெண்கள் அணிக்கு தலைமை தாங்கியவள். ஜே.வி.பி.க்கான சீருடை தைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தவள். தகப்பனார் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தில் கண்காணிப்பாளர். மனம்பேரியுடன் கூடப்பிறந்தவர்கள் பத்துப்பேர். குடும்பத்தில் மூத்தவள். கதிர்காம வித்தியாலயத்தில் க.பொ.த. (சா-த) வரை கற்று முடித்துவிட்டு விட்டு பௌத்த பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தாள். 1969ம் புதுவருட அழகு ராணிப் போட்டியில் இரண்டாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டாள். 1970 ஏப்ரல் 16ம் திகதி நடத்தப்பட்ட புதுவருட அழகு ராணிப் போட்டியில் முதலாவதாகத் தெரிவு செய்யப்பட்டாள். அடுத்த வருடம் அதே நாள் கொலைஞர்களால் கடத்தப்பட்டாள்.
கடத்தலும் வதையும்

1971 ஏப்ரல் 16ம் திகதி காலை 9 மணியளவில் மனம்போpயின் வீட்டுக்குள் புகுந்த லெப்டினன்ட் விஜேசூரிய தலைமையிலான குழு வீட்டிலுள்ள பொருட்களைக் கிண்டிக் கிளறி தூக்கியெறிந்தது. மனம்பேரியை அடித்து தலை முடியுடன் இழுத்துச் சென்றனர். தாய் லீலாவதி ”பெட்டப்பிள்ளையப்பா ஒண்டும் செஞ்சு போடாதீங்கோ ஐயா!” என கதறி அழுத வண்ணம் பின் தொடர்ந்த போது காலால் உதைத்துத் தள்ளிவிட்டு மனம்பேரியை தூக்கிக் கொண்டு வாகனம் பறந்தது.

அன்றைய இரவு முழுவதும் மனம்பேரி சித்திரவதை செய்யப்பட்டாள். அடுத்தநாள் 17ம் திகதி மனம்பேரியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
”ஐந்து வகுப்புகளிலும் கலந்து கொண்டாயா?”
மௌனம்

”ஜே.வி.பி.யுடன் எவ்வளவு காலம் தொடர்பு வைத்திருந்தாய்?”
”.........”
”நீ என்னென்ன நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டிருந்தாய்?”
இதற்கும் மௌனம் சாதிக்கவே தங்களது வக்கிர இயல்பை வெளிக்காட்டினர். மனம்பேரி விசாரணை வழக்கின் போது வெளிவந்த தகவல்கள் இவை.

”சரி... நான் சொல்வதை அவதானமாகக் கேள். சொல்வதைச் செய்யாவிட்டால் உனது உயிர் போகும்.” இது லெப்டினன்ட் விஜேசூரிய. அவர் தொடர்ந்தும் ”உனது ஆடைகளைக் ஒவ்வொன்றாகக் கழற்று...”
”ஐயோ.. சேர், வேண்டுமென்றால் சுட்டுப் போடுங்கள். ஆடையைக் கழற்றச் சொல்லாதீங்க...” என மனம்பேரி கண்ணீர் விட்டுக் கதறினார்.

”அது எனது வேலை. நான் சொல்வதை மட்டும் நீ செய்” என துப்பாக்கியைத் தலையில் அழுத்தி மிரட்டிய போது அழுகையுடன் மேலாடைகளைக் கழற்றி உள்ளாடையுடன் இருந்தாள். மீண்டும் சித்திரவதைக்கு உள்ளாக்கி உள்ளாடைகளையும் கழற்றி விட்டு நிர்வாணம் ஆக்கினர். தனது கைகளால் மனம்பேரி மறைவிடங்களை மறைத்தாள்.

மனம்போpயை லெப்டினன்ட் விஜேசூரிய முதலில் பாலியல் வல்லுறவு புரிந்தான். அதன் பின் மாறி, மாறி ஏனைய சில இராணுவத்தினரும் பாலியல் வல்லுறவு புரிந்தனர். இதே வேளை அதே முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய இளம் பெண்களும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார்கள்.

ஒரு அறையில் இந்த அட்டுழியங்கள் நிகழ்ந்து கொண்­டிருக்கும் போது பக்கத்து அறையில் ”வெடகிட்டி கந்த பாமுல விகாரை”யின் பிக்குவும் இதே முகாமில் வதைக்குள்­ளாக்கப்பட்டுக் கொண்டிருந்தார். இப்பிக்குவை தடுப்பிலுள்ள பெண்கள் மீது பலாத்காரமாக பாலியல் வல்லுறவு புரிய வைத்தனர். இறுதியில் இந்த பிக்குவையும் தோண்டி வைக்கப்பட்டிருந்த குழிக்கு அருகில் நிறுத்தி வைத்து சுட்டு வீழ்த்தினர். ”புனித பூமி” என சொல்லப்படுகின்ற கதிர்காமத்­தில் தான் இந்த கொடுமைகள் நிறைவேற்றப்பட்டன.
உயிர் பிரிந்தது.

எல்லாவற்றையும் முடித்த பிறகு மனம்பேரியை கைகளிரண்டையும் மேலே தூக்கச் சொல்லி மீண்டும் பணிக்கப்பட்டது. திரும்பியவாறு வீதியில் நடக்க கட்டளை பிறப்பித்தனர். அரை மயக்க நிலையில் தள்ளாடியபடி துப்பாக்கி முனையில் வீதியில் நடத்தப்பட்டாள் நிர்வாணமாக. சார்ஜன்ட் அமரதாச ரத்னாயக்காவின் துப்பாக்கி முனையிலேயே மனம்பேரி வீதியில் நடத்தப்பட்டாள். மனம்பேரியை முன்னே செல்ல விட்டு துப்பாக்கி தோட்டக்களால் முதுகைத் துளைத்தான் சார்ஜன்ட் அமரதாச. கீழே விழுந்த மனம்பேரியை மீண்டும் உலுக்கி நிறுத்தி நடத்தினான் மீண்டும் அவனின் துப்பாக்கிக் குண்டுகள் மனம்பேரியின் உடலைத் துளைத்தன.

”தண்ணீர் தண்ணீர்...” என முனுகிய மனம்பேரிக்கு எலடின் எனப்படும் வியாபாரி ஒருவர் தண்ணீர் கொடுக்க முற்பட்டபோது ”விலகிப் போ! உதவி செய்ய முற்பட்டால் நீயும் கொல்லப்படுவாய்” என அச்சுறுத்தப்படவே அவரும் விலகிச் சென்றார். நடுவீதியில் சூட்டுக் காயங்களுடன் விழுந்து கிடந்த மனம்பேரியை அப்படியே விட்டுவிட்டு திரும்பினர். இராணுவத்தினர். பின்னர் ஊர் வாசிகளான எலடின் (இவர் இன்னமும் உயிருடன் இருக்கிறார். மனம்பேரியின் வழக்கில் முக்கிய சாட்சிகளில் இவரும் ஒருவர். இவரைச் சந்திக்க ”சரிநிகர்” கதிர்காமத்துக்கு சென்ற நேரத்தில் ”மன்னியுங்கள் அந்த கொடுர சம்பவத்தை நினைவுக்கு கொண்டுவர விரும்பவில்லை” என அது பற்றி கருத்துரைக்க மறுத்து விட்டார்.)

காதர், பெருமாள் ஆகிய ஊர் வாசிகளை அழைத்து பிணங்களைப் புதைப்பதற்கான குழிகளைத் தோண்டும்படி கட்டளையிட்டனர். அவர்கள் தோண்டினர். மனம்பேரியின் முனகலைக் கேட்ட எலடின் அருகில் சென்ற போது :அந்த பையனிடம் (பெருமாள்) எனது காதணிகள் இருக்கின்றன அதனைக் கொண்டு போய் அம்மாவிடம் கொடுத்து தங்கைக்கு அதனை கொடுக்கச் சொல்லுங்கள். நான் ஒருவருடனும் கோபமில்லை காமினி பாஸ் தான் குழுப்பிப் போட்டார்...” (கிளர்ச்சியின் போது கதிர்காமத்தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் தான் காமினி பாஸ்) எனக் கூறிக் கொண்டே தண்ணீர் கேட்டிருக்கிறாள். உடனே தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு இராணுவ முகாமுக்குச் சென்று ”உயிர் இன்னமும் இருக்கிறது. எனவே புதைப்பதற்கு முடியாது.” என்பதைத் தெரிவித்தார். உடனே இருவரை அனுப்பி உயிரைப் போக்கும்படி பணித்தான் லெப்டினன்ட் விஜேசூரிய. அவர்கள் இருவரும் அப்பாவச் செயலை செய்ய முடியாது என திரும்பி விடவே இன்னொருவன் அனுப்பப்பட்­டான். அவன் போய் இறுதியாக மனம்பேரியின் நெற்றிப் பொட்டில் சுட்டான். மனம்பேரி புதை குழியில் சாய்ந்தாள். (இறு­தி­யாக சுட்ட நபர் இறுதி வரை அடையாளம் காணப்படவில்லை.)

முன்னைய வருடம் இதே நாள் அழகுராணியாக காட்சியளித்த அதே தபால் நிலையத்திற்கருகிலேயே மனம்பேரியின் உயிரும் பிரிந்தது. அதே இடத்தில் மனித புதைகுழிக்குள் புதைந்தது. அவளது உடல்.

மனம்போpயின் படுகொலை தொடர்பான பொலிஸ் முறைப்பாடுகள் சிலவற்றின் பின்னர் கண்துடைப்புக்காகவே அன்றைய சிறிமா அரசாங்கம் மனம்பேரியின் வழக்கை சிசாரணைக்கு எடுத்துக் கொண்டதென்றால் அது மிகையில்லை.
கொலைஞர்களின் முடிவு.

1971ம் ஆண்டு மே மாதம் 24ம் திகதி முற்பகல் 10.30க்கு மனம்பேரியின் சடலம் புதைகுழியிலிருந்து மீள எடுக்கப்பட்டு வைத்திய பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. 1973 மே மாதத்தில் இவ்வழக்கு விசாரணை 11 நாட்கள் நடந்தது. வழக்கின் இறுதியில் லெப்டினன்ட் அல்பிரட் விஜேசூரிய சார்ஜான்ட் அமரதாச ரத்நாயக்க ஆகிய இருவருக்கும் பதினாறு வருட கடுழிய சிறைத்தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டது. 1973ம் ஆண்டு மே மாதம் 30ம் திகதி இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. தண்டணை வழங்கப்பட்ட இரு இராணுவத்தினரும் தங்கள் மீதான தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தனர். இம்மேன்முறையீட்டு வழக்கு 1973 ஒக்டோபரில் நடத்தப்பட்டது. இவ்வழக்கிலும் சரியானதே என தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் தண்டனையை அனுபவித்து வந்தனர்.

அவர்களில் லெப்டினன்னட் விஜேசூரிய சிறையில் நோயுற்று மரணமானான். சார்ஜன்ட் அமரதாச தண்டனை முடிவுற்று விடுதலையான பின் 1988இல் ஜே.வி.பி.யினரால் கொல்லப்பட்டான்.

(1996 ஏப்ரல்.4 சரிநிகர்)
(தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ”நிறப்பிரிகை” சஞ்சிகையில் மீள்பிரசுரம் செய்யப்பட்டது.

AddThis Social Bookmark Button


மகளிர் சாசனம்:
கண்டுகொள்ளாத தவறுகள்












என்.சரவணன்

”மகளிர் சாசனத்தை அமுல் படுத்து!”
”பெண்களே! யுத்த அடக்கு முறைகளுக்கு எதிராக அணி திரள்வோம்!”

இம்முறை இலங்கையில் ”சர்வதேச பெண்கள் தினத்தை நினவு கூருகின்ற பெண்கள் அமைப்புகள் பல இக்கோரிக்கைகளையே முன்னணி கோஷமாக எழுப்ப தீர்மானித்திருக்கின்றன.

இவற்றில் ”மகளிர் சாசனம்” பற்றிய விவாதங்கள், கலந்துரையாடல்கள் என்பவற்றை சில பெண்கள் அமைப்புகள் நடத்தி வருகின்றன.

எனவே இன்றைய காலப் பொருத்தம் கருதி மகளிர் சாசனம் பற்றிய நடைமுறை சாத்தியங்கள் குறத்து கலந்துரையாடுவது பொருத்தமானது.

மகளிர் சாசனத்தின் தோற்றம்:

1975ம் ஆண்டு சர்வதேசப் பெண்கள் வருடத்தை உலகம் பூராவும் நினைவு கூர்ந்த போது 1975 தொடக்கம் 1985ம் அண்டு வரையான பத்தாண்டுகளை பெண்கள் தசாப்பதமாகவும் ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது. அதைத் தொடர்ந்து உலகம் பூராவுமுள்ள பல நாடுகள் பெண்கள் நலனில் ஓரளவு ஈடுபாடு கொண்டன.

நான்கே ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையில் மகளிருக்கெதிரான சகலவிதமான பாரபட்சங்களையும் இல்லாதொழிக்கும் உடன்படிக்கையை (CEDAW-Convention on the Elimination of all Discrimination Against Women) 1979 இல் அறிமுகப்படுத்தியது. ஆனாலும் வெகு சில நாடுகளே இவ்வுடன்படிக்கையில் உடனடியாக கையெழுத்திட முன்வந்தன.

இந்த CEDAW உடன்படிக்கையானது பெண்களின் உரிமைகளைப் பேணுவதற்கான அடிப்படையான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் 1981ம் ஆண்டு இவ்வுடன்படிக்கை­யில் கைச்சாத்திட்டது. இதனால் இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திட்ட முதன்மை நாடுகளில் ஒன்றாகவே இலங்கையும் கொள்ளப்படுகிறது. இவ்வுடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்ட போதும் அரசாங்கம் பெண்களின் நலனில் அக்கறையில்லாமலேயே செயற்பட்டு வருகின்றது எனும் குற்றச்சாட்டை பெண்கள் அமைப்புகள் முன்வைத்தன.

அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தை CEDAW உடன்படிக்கையை இலங்கையில் அமுலாக்கும்படியும் இதற்கான ஒரு சுதேச சாசனம் ஒன்றை வரையும் படியும் பெண்கள் அமைப்புகள் கோரின. இதற்கான ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்தே 90களின் ஆரம்பத்தில் அரசாங்கம் மகளிர் தொடர்பான உத்தேச சாசனம் ஒன்றை அமைக்கும் பொறுப்பை மகளிர் அமைச்சிடம் ஒப்படைத்தது. மகளிர் விவகார அமைச்சு இவ் உத்தேச சாசனத்தை வரைவதற்காக பெண்கள் உரிமைகளில் அக்கறை காட்டும் முக்கிய பெண் பிரமுகர்கள் சிலரைக் கொண்ட குழுவொ­ன்றை அமைத்தது. இக்குழுவினரால் அமைக்கப்பட்ட உத்தேச சாசனமே 1993ம் ஆண்டு மார்ச் 3ம் திகதி பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கீகரிக்கப்ப்பட்­டது. இந்த சாசனமானது ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச பெண்கள் சாசனமாக கொள்ளப்படுகின்ற ஊநுனுயுறுவை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்­பட்டுமுள்ளது. இலங்கையில் பெண்கள் நலன் தொடர்பான விடயங்களில் ஈடுபாடுடைய பெரும்பாலான பெண்ணிலைவா­திகளின் கருத்தின்­படி இச்சாசனம் மிகவும் பிரயோசனமா­னது. சிறந்தது. விமர்சனங்கள் திருத்த வேண்டியவைகள் எதுவுமில்லை. ஆனால் நடைமுறைச் சாத்தியம் பற்றியே கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது என்கின்றனர்.

ஆனால் அதற்கிடையில் இச்சாசனம் தொடர்பாக பல விடயங்களை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது என்பதை பலர் உணர மறுக்கின்றனர். வெகு சிலரிடமே இச்சாசனத்தின் உள்ளடக்கம் தொடர்பான விமர்சனங்கள் இருப்பதைக் காண முடிகிறது. பெண்கள் சாசனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களில் குடும்ப அமைப்பு முறையை பாதுகாக்கக் கூடிய பல அம்சங்கள் ஆங்காங்கு சிதறிக் கிடக்கின்றன. பெண்கள் மீதான ஒடுக்கு முறையின் பிரதான கருவிகளில் ஒன்றாகவே குடும்ப நிறவனம் அடையாளம் காணப்படுகின்ற போதும் அக்குடும்ப அமைப்பு முறைக்கு தோகக் கூடிய அம்சங்களை இதில் காண முடிகிறது.

ஆண்களுக்கிருக்கின்ற பாலியல் சுதந்திரங்கள் எவற்றையும் பெண்களுக்கும் இருப்பதாக இச்சாசனம் முன்­வைக்கவில்லை. புராதன தாய் வழிச் சமூகத்தை, தனிச் சொத்­துரிமையைப் பேணுவதற்காக உடைத்து தற்போ­தைய தந்தை வழிச் சமூகத்தை நிறுவிய ஆணாதிக்கம் தமது தனிச்சொத்துரிமையை பாதுகாப்பதற்காகவே ”தகாத பாலுறுவு” எனும் தடையை பெண்களுக்கு மட்டுமே விதித்தது. அந்தக் கருத்தியலின் தொடர்ச்சியான இருப்பை இன்னமும் ஆண்கள் அனுபவித்து பேணி வருவதுடன் பெண்கள் அவ்வுரிமையை பயன்படுத்தினால் ”வேசித்தனம்” என அவமானப்­படுத்தி சமூகத்தால் தூற்றவும் செய்கிறது. இதே சமூகத்தால் தூற்றவும் செய்கிறது. இதே முறைமையை பெண்கள் சாசனம் பேணுகிறதா? ஆண்களுக்கு மட்டுமே இவ்வுரிமை இருப்பதாகக் கொள்கிறதா?

இந்நிலப்பாடானது அரசாங்கம் பெண்கள் மீதான கருத்தியல் சார்ந்த ஒடுக்குமுறையை பேணுவதாகவே கருதமுடியும்.

இன்று பெண்ணியத்தில், ஒருபால் உறவு சுதந்திரம் (Lesbiana Relationaship) என்பது இன்று பெண் விடுதலையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகப் பேசப்பட்டு வருகிறது. கருவள கட்டுப்பாட்டை திண்து வருவதில் வெற்றி கண்டு வந்த ஆண்களிடமிருந்து விடுதலை பெறுவதற்கும் பெண்ணின் உயிரியல் இயல்புகளை ஆண்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருவதில் இருந்து விடுபடவும் ஒரு பால் உறவு சுதந்திரம் பெண்ணுக்கு இருக்க வேண்டுமென பேசப்படுகிற அளவுக்கு இன்று தத்துவார்த்த விவாதங்கள் வளர்ச்சியுற்றிருக்கிற போது இலங்கை மகளிர் சாசனத்தில் பாலியல் உரிமைகளுக்கே இடமில்லையென்றாகிவிட்டது. இது பற்றிய சர்ச்சைகளை பல பெண்ணிலைவாதிகள் எழுப்பாமல் இருப்பது தான் ஆச்சரியத்துக்குரியது.

இந்தச் சில குறைகள் இருந்த போதும் பெரும்பாலான உருப்படியான அம்சங்கள் நிறைந்த இந்த சாசனத்தில் அதன் சாத்தியப்பாடு குறித்த பல கேளிகளை எழுப்பச் செய்கின்றன.

சாத்தியப்பாடு


முதலாவது இது ஒரு சட்டமல்ல. அரசியலமைப்புக்கு உட்பட்ட விடயமல்ல. இது வெறும் அரச கொள்கை மாத்திரமே. அதாவது அரசானது கொள்கையளவில் மாத்திரமே அதாவது அரசு கொள்கையளவில் மாத்திரமே பெண்கள் சாசனத்தில் கூறப்பட்டவற்றை ஏற்றுக் கொண்டுள்ளது என கொள்ளலாம். இச்சாசனத்துக்கு எந்த வித உத்தரவாதமுமில்லை. எனவே, இவற்றில் சொல்லப்பட்டவை மீறப்பட்டிருப்பதாக எவருக்கெதிராகவும் வழக்கு தொடர முடியாது. அதாவது ஒரு தனி நபரோ ஒரு நிறுவனமோ ஏன் அரசாங்கமோ கூட பெண்கள் விடயத்தில் பாரபட்சமாக நடந்து கொள்வதையிட்டு எதுவித சட்ட நடவடிக்கையையும் இச்சாசனத்தைக் காட்டி எடுக்க முடியாது. அது வெறும் அரச கொள்கை மட்டும் தான் என்பதைக் கவனத்திற் கொள்ளவும்.

எனவே தான் 1993ல் பாராளுமன்றத்தில் இக்கொள்கை அங்கீகரிக்கப்பட்டதில் இருந்து பெண்கள் அமைப்புகள் பல இச்சாசனத்திற்கு அரசியல் அந்தஸ்து வழங்கும்படி போராடி வருகின்றனர்.

ஆனாலும் இச்சாசனத்தின் சாத்தியப்பாடு குறித்து கண்காணிப்பதற்கான பெண்கள் தேசியக் குழு (National Committee of Women) எனும்அரசாங்க நிறுவனம் ஒன்றை அப்போதைய அரசாங்கம் நியமித்தது. இந்தக் குழுவுக்கூடாகவேனும் சாசனம் சட்ட அந்தஸ்து பெறும் வரையில் பெண்கள் உரிமைகளை ஓரளவு பாதுகாக்கலாம் எனப் பலர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதுவும் கனவாக மட்டுமே காணப்பட்டது. காரணம் 15 பேர் அடங்கிய இந்த தேசியக் கமிட்டியால், குறிப்பிட்ட ஒரு சம்பவத்தை சட்ட மீறல் நடவடிக்கையாகக் கொண்டு செயற்பட முடியாது. இக்கமிட்டிக்கு முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்து நேரடியாக நடவடிக்கை எடுக்கவோ, சமரச முயற்சிகளில் ஈடுபடவோ, சாட்சியங்களை அழைக்கவோ அதிகாரம் இல்லை.

ஆகக் கூடிய பட்சம், பாரபட்சம் தொடர்பான முறைப்பாடு­களை பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட அதிகாரப்பிரிவு­களை வலுப்படுத்தி, அபிவிருத்தி கொள்கைகள், சட்டங்கள், நிர்வாக நடைமுறைகள் என்பன சாசன பிரமாணங்களின்படி கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்று கண்காணிக்கவும் சிபாரிசுகளை செய்யவும் மட்டுமேமுடியும். எனவே கண்காணி­ப்பு, சிபாரிசு, விதந்துரைப்பு, ஆலோசனை அளித்தல் என்பன போன்ற செயற்பாடுகளுக்கப்பால் எதுவித அதிகாரமும் கமிட்டிக்கு இல்லை என்பதே உண்மை.

ஆக, ஒரு பக்கம் சட்ட அந்தஸ்து இல்லாத சாசனம். மறுபுறம் அதிகாரம் இல்லாத கமிட்டி இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு தான் பெண்கள் நலனில் இந்த அரசாங்கம் ஈடுபடப் போகின்றதென்றால் பெண்களின் பாரிய போராட்டத்திற்கான தேவையுள்ளது என்பதை உணர்தல் வேண்டும்.

ஆனால் வாய் கிழிய நெஞ்சதிர மார்தட்டிக் கொள்வோம். நாட்டின் ஜனாதிபதி பெண் என்று, பிரதமர் பெண் என்று. பாராளுமன்றத்தில் அதிகப் பெண்கள் அங்கம் வகிக்கிறார்கள் என்று. அமைச்சரவையில் அதிகப் பெண்கள் இம்முறை இருக்கிறார்கள் என்று...

இலங்கையில் பெண்கள் சாசனம் வரையப்பட்டது (ஆண் தலைமையிலான) ஐ.தே.க. ஆட்சியின் போதே. பெண்கள் தேசியக் கமிட்டி அமைக்கப்பட்டதும் (ஆண் தலைமையி­லான) ஐதே.க. ஆட்சியின் போதே.

ஆனால் அன்று தொடக்கமே இவ்விரண்டையும் வலுவுள்ளதாக்கும்படி பெண்கள் போராடித்தான் வந்தார்கள். பலன் இருக்கவில்லை. சந்திரிகா ஆட்சி தலைமை ஏற்ற போது எல்லாம் தீர்ந்தது என நினைத்தனர் பெண்கள். இன்று ஒன்றரை வருடங்கள் ஆகி விட்டன. சாசனம் வெற்றுக் கொள்கையாகவே உள்ளது. தேசியக் கமிட்டி கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கும் ஒன்றாக மட்டுமே உள்ளது.

இன்று இச்சாசனம் தொடர்பாக பெண்கள் எழுப்ப வேண்டிய முக்கிய மான கோரிக்கை என்னவென்றால்,

”அரசே! சாசனத்திற்கு சட்ட அந்தஸ்து கொடு! பெண்கள் தேசிய கமிட்டியை நீக்கி, பெண்கள் ஆணைக்­குழுவை ஸ்தாபி!”
என்பதே!.

(1996 மார்ச் 07 சரிநிகர்)

AddThis Social Bookmark Button


Design by Amanda @ Blogger Buster