Tuesday, January 27, 2009

டொரின் விக்கிரமசிங்க




1907ஆம் ஆண்டு பெப்ரவரி 13ஆம் திகதி இங்கிலாந்தில் செஷர் பகுதியில் பிறந்த டொரின் விக்கிரமசிங்க ஆசியாவிலேயே பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட முதலாவது அந்நிய நாட்டுப் பெண் என்பது முக்கியமான ஒன்று. இவர் இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த டொக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்கவின் மனைவியாவார்.

டொரின் இங்கிலாந்தில் பல முற்போக்காலர்களை உருவாக்கிய கல்லூரி என சொல்லப்படும், ஹர்பட் ஷயரில் உள்ள சென் கிரிஸ்டோபர் கல்லூரியில் கல்வி பயின்றார். அப்போது அக்கல்லூரியில் கிருஷ்ணமேனன் (பிற்காலத்தில் இந்தியாவில் வெளியுறவு அமைச்சராக இருந்தவர்.) லண்டனில் கல்வி கற்றுக்கொண்டே வரலாறு கற்பிக்கும் விரிவுரையாளராக இருந்தார். அவரது விரிவுரையினூடாக இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிய சிநிதனைகள் மாணவர்கள் மத்தியில் பரவின. இவரிடம் கற்ற டொரின் கிருஸ்ணமேனனின் ஆலோசனையின்படி 1926இல் பல்கலைக்கழகத்தில் பொருளாதார அரசியல் துறைகளை கற்கத் தொடங்கினார்.

பல்கலைக்கழகத்தில் முக்கியப் பிரமுகராக இருந்தவரும் மார்க்சீய கருத்துக்களைக் கொண்டவருமான ஹெரால்ட் லஸ்கியின் கருத்துக்களால், ஈர்க்கப்பட்டார். டொரினோடு கல்வி கற்ற சமகாலத்தவர்களில் கலாநிதி என்.எம்.பெரேரா ஜெகநாத் கொஸ்லா (பிற்காலத்தில் இந்தியத் தூதுவராகக் கடமையாற்றியவர்) ஆகியோரும் உள்ளடங்குவர். இந்திய சுதந்திரப் போராட்ட ஆதரவாளராகவும் இந்திய இலங்கையர்களால், முன்னெடுக்கப்பட்ட ஏகாதிபத்திய விரோத நடவடிக்களுக்கும் அதரவாக டொரின் செயல்பட்டார். இந்தப் பழக்கங்களின் வாயிலாக எஸ்.ஏ.விக்கிரமசிங்காவுடன் தொடர்புகொள்ள கிடைத்திருந்தது. டொரின் தனது படிப்புக்குப்பின் இந்தியாவுக்குப் போய் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொள்ளும் நோக்குடன் இந்தியாவுக்குச் சென்று தொழில் புரியும் முயற்சிகளை செய்துவந்தார். என்ற போதும், அம்முயற்சிகள் தோல்வியடைந்தன. டொரினுக்கு இலங்கையில் வேலையொன்றை தேடித்தருவதாக எஸ்.ஏ.விக்கரமசிங்க ஒப்புக்கொண்டதன்பின் டொரின் இலங்கை வரத் தீர்மானித்தார். 1930இல் இங்கிலாந்திலிருந்து கப்பலில் புறப்பட்டார் டொரின் அந்தக் கப்பலில் பயணம் செய்த தோட்ட ஊரிமையாளர்களை காரசாமாக கண்டித்து விமர்சித்த டொரின் பலரது கவனத்துக்குமுள்ளானார். 1930நவம்பர் மாதம் கொழும்பை வந்தடைந்தார். அவர் மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபராக நியமிக்கப்பட்டார்.

அந்தப் பாடசாலையில் தனது அரசியல் வேலைகளையும் செய்யத்தொடங்கினார். அப்பாடசாலையில் கடமையாற்றிய ஏனைய ஆசிரியர்களும் தேசிய அரசியல் சுதந்திரப் போராட்டம் என்பனவற்றில் ஈடுபாடுகொள்வதற்கு டொரின் காரயமானார். இந்த ஆசிரியர்கள் பிற்காலங்களில் ”சூரியமல்” இயக்கத்திலும் தீவிரமாக ஈடுபாடுகொண்டனர். பாடசாலை மாணவர்களுக்கும் கூட தேசிய உணர்வு ஊட்டப்பட்டது.


1933 ஏப்ரல் 26ஆம் திகதி டொரின் எஸ்.ஏ.விக்கிரமசிங்காவை மணந்தார்.

எஸ்.ஏ.விக்கிரமசிங்க 1931இல் பாராளுமன்றத்துக்கு தொரிவு செய்யப்பட்டிருந்தார். அந்நிய அரசாங்கத்துக்கு எதிராகவும் தேசிய முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்து குரல்கொடுத்து வந்த எஸ்.ஏ.விக்கிரமசிங்காவை மணந்ததன் பின் கொழும்பில் மிகப் பெரிய பௌத்த மகளிர் பாடசாலையான விசாகா வித்தியாலயத்தின் அதிபராக நியமிக்கப்பட்டார். இப்பாடசாலையில் முற்போக்கான சீர்திருத்தங்களில் அக்கறையோடு ஈடுபட்டார். 1932இல் காந்தி சிறையில் இருந்த போது எஸ்.ஏ.விக்கிரமசிங்காவும் டொரினும் சென்று சந்தித்து வந்தனர்.

இலங்கையின் முதலாவது அரசியற் கட்சியும் இடது சாரிக் கட்சியுமான லங்கா சமசமாஜக் கட்சி தோற்றம் பெறுவதற்கு துணைபுரிந்த காரணிகளில் ஓன்றாக ”சூரிய மல்” இயக்கத்தைச் சொல்லலாம். சூரிய மல் இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் டொhpனும் ஒருவர். அவ்வியக்கத்தில் தீவிரமாக இயங்கினர்.

”நவம்பர் 11ஆம் திகதியன்று சூhpயமல்” (சூரிய காந்திப்பூ) தாங்கிக்கொண்டு... உங்கள் ஆத்ம கௌரவத்தைதையும் இறைமையையும் வெளிக்காட்டுங்கள்... ஏகாதிபத்திய யுத்தத்துக்கு ஒத்துழைப்புக்கு நீங்கள் தயாரில்லை என்பதை வெளிக்காட்டுகங்கள்.... ஒவ்வொரு சூரியமல்லுக்கும் ஏகாதிபத்திய, பாசிசவாதத்துக்கும் யுத்தத்துக்கும் எதிரான தாக்குதலாகும்....”


என சூரிய மல் இயக்கம் பற்றி பிரச்சாரம் செய்யப்பட்டது.

எஸ்.ஏ.விக்கிரமசிங்க லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து முரண்பட்டு விலகி பின்னர் கொம்யுனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்தார். 1947ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்ட கொம்யூனிஸ்ட் கட்சிக்கு மொத்த ஆசனங்களில் மூன்று ஆசனங்களே கிடைத்திருந்தது. 1952ஆம் ஆண்டு தேர்தலிலும் கொம்யூனிஸ்ட் கட்சி 3 ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்தது. இத் தேர்தலில் தான் அக்குரெஸ்ஸ தொகுதியில் டொரின் விக்கிரமசிங்க போட்டியிட்டார். எஸ்.ஏ.விக்கிரமசிங்காவின் சகோதரியின் கணவரான சரத் விஜயசிங்கவும் அதே தொகுதியில் ஐ.தே.க.வை பிரதிநிதித்துவப்படுத்தி டொரினோடு போட்டியிட்டார்.

பலத்த போட்டியின் மத்தியில் இடம்பெற்ற இத்தேர்தலில் ”வெள்ளைக்காரப் பெண்”, ”அந்நியநாட்டவள்” போன்ற கோஷங்களை எழுப்பி டொரினுக்கு எதிராக எதிர் வேட்பாளர்கள் செயற்ப்ட்டனர். எவ்வாறாயினும் டொரின் சமூகத்தில் பலரால் ஏற்றக்கொள்ளப்பட்டவராக இருந்தமையால் வெற்றிபெற்றார். முதற்தடைவையாக ஆசிய நாடொன்றில் பொது மக்களால் தெரிவு செய்யப்பட்ட விதேச பெண்ணாக வரலாற்றில் பதியப்பட்டார் டொரின்.
பாராளுமன்றத்தில் பல முற்போக்கான கருத்துக்களை முன்வைத்து பல உரைகளை ஆற்றியிருக்கிறார் டொரின்.

”பெண்களுக்கு: ஆண்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போன்று சமமான சம்பளம் வழங்கப்பட வேண்டும்.” என அன்றைய அரசவையில் குரல்கொடுத்திருந்தவர் டொரின்.


1952இலிருந்து 1956வரை டொரின் அரசவையில் அங்கம் வகித்தார்.

1956ஆம் ஆண்டு தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்ற போதும் தனது பிரதேசத்தில் தொடர்ந்தும் சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இலங்கையின் பாராளுமன்ற அரசியலில் பங்குகொண்ட பெண்களில் டொரினின் பங்களிப்பு முக்கியமானது என்ற கருத்து இன்னும் பலாpடம் உண்டு.

(இக்கட்டுரையில் வந்த டொரின் விக்கரமசிங்க பற்றிய தகவல்களில் பெரும்பாலானவை குமாரி ஜெயவர்தன எழுதிய Doreen wickramainghe A Western Radical in SriLanka எனும் நூலிலிருந்து பெறப்பட்டவை)

AddThis Social Bookmark Button


0 comments: to “

Design by Amanda @ Blogger Buster