Friday, January 23, 2009

பரத்தமைக் குற்றம்:
பெண்களுக்கு மட்டும்
உரித்தான ஒன்றா?

என்.சரவணன்


(இந்தக் கட்டுரை கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர்கள் வருடாந்தம் நடாத்தும் கலை நிகழ்ச்சியான ”வஸ்ஸானய” எனும் நிகழ்ச்சியில் வெயியிடப்பட்ட மலரில் பிரசுரிப்பதெற்கென கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதப்பட்டது. 1995 ”வஸ்ஸானய” எனும் சிறப்பு மலரில் இது வெளியானது. இக்கட்டுரை பின்னர் ”தினத்தந்தி” (1995-1996இல் சில காலம் மட்டுமே வெளிவந்த திணமணி பத்திரிகையில் மீள் பிரசுரம் செய்யப்பட்டிருந்தது)


கற்பு நிலையென்று சொல்ல வந்தார்
இரு கட்சிக்கும் அதை பொதுவில் வைப்போம்”...
இது பாரதி கூறிய கூற்று.

”கற்பு” எனும் அம்சம் உண்மையில் பெண்ணிடம் மட்டுமே இருக்கின்ற, இருக்க வேண்டிய ஒன்றாகவே சமூகம் கொள்கிறது. ”கற்பு” நெறியானது இன்றைய சமூகத்தில் உடற் புணர்வையே சுட்டும் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. என்ற போதும் இந்த ”கற்பு” நெறியானது பெண் மட்டுமே ஒழுக வேண்டிய ஒன்றாகவும் ஆண் உடற்புணர்வுக்குள்ளானால் ”கற்பு” நெறிக்குள் அடங்காது என்ற கருத்துமே சமூக கருத்தியலாக இருக்கிறது.

இந்த நோக்கிலிருந்து தான் ”பரத்தமை” (விபச்சாரம்) பற்றிய மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. முத­லில் ”பரத்தமை” என்ற பதமே ஆண்ணிலைப்பட்ட கருத்தா­கவே தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது கவனிக்கத்கது.

பரத்தமையில் ஒரு பெண் ஈடுபடுவதற்கான காரண­மாக அவளது பாலியல் மேலுணர்வை (அல்லது இச்சையோ) கொள்ள முடியாது அதற்கான சமூக பொருளாதார அரசியற் காரணிகளே பெண்ணானவள் பரத்தமை நிலையினை அடைய காரணமாக இருக்கிறது.

எனவே, நாம் வெறுமனே ஒரு பெண் தனது பாலியற் தேவைக்காகவே பரத்தமையில் ஈடுபடுகிறாள் என்பது போன்ற முடிவுக்கு வருவதானது சமூக கருத்தியல் இருப்பை விளங்கிக் கொள்ளாத முடிவாகும். எனவே மேற்படி விடயத்தை எடுகோலாகக் கொண்டால்: பெண்ணானவள் பரத்தமைக்கு தள்­ளப்படுவதற்கு காரணமான குற்றவாளியாக சமூக, பொரு­ளாதார, அரசியல் சூழ்நிலைகளையே கொள்ள வேண்டியுள்­ளது. எனவே அவை மாற்றியமைக்கப்படாத வரை இவற்றிற்­கான தீர்வும் இல்லை எனும் முடிவுக்குக் கூட வரலாம். அம் ”மா­ற்­­­றியமைத்தல்” என்பது இயல்பாக ஆகிவிடக் கூடிய­தல்ல. நிர்ப்பந்தமாகவே தாக்கியெறியப்பட வேண்டியவை. இன்­­று­ள்ள முதன்மைக் கடமையாகக் கூட இதனைக் கொள்ளலாம்.

”பரத்தமை” பற்றிய பெண்களது நியாயப்படுகளில் ஒன்றாக மேற்படி ஒரு காரணத்துடன் இன்னும் இரு காரணங்களையும் குறிப்பிடலாம்.

(1) பரத்தமை என்பது பெண்ணினது சுயநிh;ணய உரிமைக்கு உரித்தான ஒன்று அவளது தொழிலாக அத­னைக் மேற்கொள்ள விரும்புகிறாள் என்றாள் அது அவளது தொழிற் சுதந்திரம். பெண்- பரத்தமையை தொழிலாகக் கொண்டு விரும்பிப் போவதில்லை என்பதையும் சமூக நிர்ப்­பந்தத்தின் விளைவே அந்நிலையை ஒரு பெண் அடைந்து அதன் பின் தொழிலாக மேற்கொள்ள வேண்டிய சூழலுக்­குள்ளாகிறாள் என்பதையும் நினைவிற் கொள்ளல் அவசியம்.

(2) பரத்தமை தொடர்பான சட்ட அமுலாக்க விடயத்­தை எடுத்துக் கொண்டால். அங்கு பரத்தமை புhpந்ததற்கான குற்றத்திற்காக பெண்ணே தண்டிக்கப்படுகிறாள்.

”பணம் கொடுத்து பாலியல் புணர்ச்சிக்கு அழைப்பதற்கு ஆண்கள் தயாராக இருக்கும் போது பெண் மட்டும் ஏன் தண்டிக்கப்படுகிறாள்?”

என்கிறார் பெண்ணிலைவாதிகளில் ஒருவரான சுனிலா அபேசேகர.

உண்மை தான் இக்கேள்வி நியாயமானதே லஞ்சக் குற்றச் சாட்டின் போதெல்லாம் லஞ்சம் வாங்கியவரை மட்டு­மல்லாது லஞ்சம் வழங்கியவரையும் சேர்த்து தண்டிக்கும் இந்த சட்டங்கள், பரத்தமை விடயத்தில் மாத்திரம் பரத்த­மையை தூண்டும் ஆண்களை பிழையற்றவனாகவே கொள்­வதுடன் தப்பிக்கும் உரிமையை ஆணுக்கு மாத்திரம் வழங்­கியிருப்பது வேடிக்கையானது. இது எத்தனை கொடூர­கரமான நடைமுறை நிகழ்ச்சி என்பதை பெண்கள் தான் உணர்வு பூர்வமாக அறிவர் பொதுவாகவே ஆளும் அரசா­ங்கங்களிலும் சரி அரசாங்கத்தினது நிர்வாகத்துக்கான சட்டங்களை இயற்­றுவதிலுதம் சரி ஆண்களே ஈடுபடுகிறா­ர்கள் என்பதாலேயே எந்தவொரு விடயம் தொடர்பான சட்டமியற்றுதலின் போதும் ஆண்ணிலைப்பட்ட ஆண்சார்பு கருத்தியலிலிருந்தே மேற்கொள்ளப்படுவதுடன் பெண்ணிக­ளின் பிறப்புரிமையை பறிக்கும் விதத்திலான சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இதனை எவரும் சுலபமாக மறுதலித்­துவிட முடியாது.

இதுபற்றி லெனின் இப்படிக் கூறுகிறார்.

”இரக்க சிந்தை துறையில் கலைக்கூத்தாடிகளும், வறுமை, இல்லமை குறித்த இந்தப் போலித்தனத்தினை போலிஸ் ஆதரவாளர்களும் ”விபச்சாரத்திற்கு எதிராகப் போராடுவதற்கு”க் கூடுகிறார்கள். இதைக் குறிப்பாகப் பிரபுக்களும், புர்ஷ்வாக்களும் ஆதரிக்கிறார்கள்”......
(தொகுப்பு நூல்கள்: பாகம்-19)

பெண் தரப்பு நியாயப்பாடுகள் இவ்வாறிருக்க சமூகம் கொண்டிருக்கிற பொதுவான கருத்தியல் நிலைப்­பாடுகளை­யும் அவைபற்றிய பெண்ணிய நியாயங்களையும் பார்ப்போம்.

ஏங்கல்ஸின் கருத்துப்படி தாய்வழிச் பெண்களுக்கே வற்புறுத்துகின்ற கற்பு நெறியை ஏற்கவில்லை. தந்தைவழிச் சமூக கட்டமைப்பினோடு பின்னர் வழிவந்த சமூக கட்டமைப்­பானது ”கற்பு” என்பது மரபுசார் வாழ்க்கை நெறியாகவும் ஒழுக்கமாகவும் வரையறுக்கப்பட்டதுடன் பெண்களுக்கு மட்டுமே அது திணிக்கப்பட்டது. இன்று ஒரு தார மணமே கற்புநெறியாக கொள்ளப்பட்டாலும் ”ஒரு தார மணம்” ஆணுக்கு வரையறுக்கப்படாதிருக்கின்றது.

பாலியல் புணர்வு

பாலியல் புணர்வு என்பது ஆணுக்கே சொந்தமான ஒன்றல்ல அது இரு பாலாருக்குமே உரித்தானது. பெண் எவ­ருடன் புணர விரும்புகின்றாலோ அது அவளது சுதந்திரத்திற்­குரிய விடயமாக கருதும் பக்குவம் ஆண்ணிலைப்பட்ட கருத்தியலை கொண்டிருக்கின்ற எமது சமுகத்திற்கு இன்னமும் ஏற்படவில்லை.

இங்கு தான் ”பரத்தமை” பற்றிக்கொண்டிருக்கின்ற நிலையான கருத்தியலை நோக்க வேண்டியுள்ளது. ”விபச்சாரம்” அல்லது ”விபச்சாரி” அல்லது ”வேசை” என்ற பதமும் கூட பெண்ணொருத்தி தன் மீதான புணர்வை பணத்திற்காகவோ அல்லது பணத்திற்காக அல்லாமலோ மேற்கொள்ளும் போது தான் சமூகம் பிரயோகிக்கின்றது.

இன்று ஆண் பல பெண்களுடன் புணர்வதை சமூகம் அவனது ஆண்மையின் பண்புக் குணமாகவும், ஆண்மையின் பெருமிதமாகவும், ஏற்கிறது. அத்துடன் அவனது ஆண்­மையை வெளிக்காட்டுவதாகவும் கொள்ளப்படுகிறது. ஆணுக்கு ஒரு காலமும் ”வேசை” என்ற பதம் பாவிக்கப்­படுவ­தில்லை. ”ஆண் பரத்தன்” என சமூகம் அழைப்பதி­ல்லை. பெண்ணே சமுதாய ஏசலுக்கு ஆட்படுகின்றாள். சங்க காலத்தில் பரத்தையர் ஒழுக்கம் கண்டிக்கப்படப்படவில்லை மாறாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆண்களுக்கு அளிக்கப்பட்ட மகத்தான உரிமையாகவும் கருதப்பட்டது.

எவ்வாறிருப்பினும் இந்த ஆணாதிக்க சமூக கருத்தி­யல் சார்ந்த சமூக அமைப்பு முறை நிலைப்பெற்றிருக்கும் காலம் வரைக்கும் ஆண் - பெண் சமத்துவமற்ற இந்த சூழலும் பெண் மீதான ஒடுக்கு முறைகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். எனவே பெண்களது பிரச்சினைகளை முன்­னெடுக்க பெண்களே களத்தில் இறங்க வேண்டும். இதில் கூற­ப்பட்ட கருத்துக்கள் சில வேளை அவசரப்பட்டு சொல்வதா­கவும் தீவிரத் தன்மையுள்ளதாகவும் தெரியலாம். ஆனால் இது தவிர்க்க முடியாதது. இது ஒரு அவசியம் கருதிய அவசரம்.

AddThis Social Bookmark Button


0 comments: to “

Design by Amanda @ Blogger Buster