Wednesday, January 28, 2009

சுரயான கினிகனி:
தேவ மஞ்சம் தீப்பிடிக்கிறதுநகர்ப்புற சொகுசு பங்களா ஒன்றில் பலி­யக்கார எனும் பெண் (வீணா ஜயக்­கொடி) தனது வீட்டுப் பணிப்பெண்ணான குமாரியுடன் (குமுதினி நிலவீர) தனியாக வசித்து வருகின்றாள். அதே வீட்டில் புதிதாக திருமணம் முடித்த இளந் தம்பதியான யமுனாவும் நிஹாலும் (சனோஜா பிபிலே-சிறியந்த மெண்டிஸ்) வாடகைக்கு தங்கியிருக்கின்றனர்.

கட்டை காற்சட்டை அணிந்த, சிகரட், விஸ்கி குடிக்கின்ற, கிளப் போய் வருகின்ற பெண்ணாக சித்திரிக்கப்படும் வீட்டுச் சொந்தக்காரி பலியக்கார ஒருபாலுறவில் நாட்டம் உள்ளவராக காண்பிக்கப்படுகிறது.

இளம் தம்பதியினரான யமுனாவும் நிஹாலும் குழுந்தை பெறுவதை தள்ளி வைத்து வருகின்றனர். இதற்கு பாலியல் ஈடுபாட்டில் கணவன் அக்கறை காட்டவி­ல்லை எனக் காட்­டப்படுகிறது. குழந்தை பெறுவதில் மனைவி காட்டுகின்ற ஆர்வத்தின் காரணமாக அவ்வப்போது கனவனுடன் தர்க்கிக்க நேரிடுகிறது. அச்சந்தர்ப்பங்களில் ஒழுங்கான வருமானமற்ற நிலையில் தனது குடும்பத்தில் தங்கையின் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்யாது, தம் இருவருக்­குமான குடும்பச் செலவுக்கே சம்பளம் போதுமான நிலையில் இருக்கையில் இது தேவைதானா என்று கேட்கிறான் கணவன். சம்பாதிப்பதில் கவனம் செலுத்துகிறான் கண­வன். செய்து வரும் வேலையில் சம்பாத்தியம் காணாது என்பதால் ஒரு கட்டத்தில் இரவு வேலையும் செய்வதற்கு தீர்மா­னிக்கிறான். மனைவி கவலைப்படுகி­றாள். இரவு வேலை ஒரு பங்களா வீட்டில் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்தப்படுகிறான்.

(அவ் வீட்டுச் சொந்தக்காரன் மனை­வியை இழந்த வயதான நிலையில் ஒரு இளம் பெண்ணை மறுமணம் முடிக்கிறான். பணத்­துக்காக கட்டிவைக்கப்படும் அவ்விளம் பெண்ணுக்கு ஏற்கெனவே உள்ள இளம் காதலன் இரவு கணவன் இல்லாத இரவு நேரங்களில் வந்து சந்தித்துப் போவதால் இரவுக் காவலனை விரட்டி விட்டு புது காவலனாக நிஹாலை சேர்க்கிறான். நிஹா­லிடம் இவ்விடயத்தை கூறாமல் வேறு யாராவது உள்ளே வந்தால் சுட்டுக் கொன்று விடும்படியும் தான் மற்றதைப் பார்த்துக் கொள்வ­தாகவும் கூறி கைத்துப்பாக்கி ஒன்றை நிஹாலிடம் கொடுத்து வைக்கிறான். என்ற போதும் அந்த காதலன் இரு நேரங்களில் வந்து அந்த மனைவி­யுடன் பாலுறவு புரிந்து விட்டுச் செல்கிறான். இதனை தடுக்க முடி­யாதபடி ”இதனை கண்டு கொள்ளாமல் இரு இல்லையேல் வேலை போகும்” என அந்த இளம் மனைவியால் நிஹால் மிரட்டப்படு­கிறான். இதற்கு என்ன செய்வது என்கிற குழப்பத்தில் அவன் பணி புரிகிறான்.)

கணவன் வேலைக்குப் போனபின் யமுனா தனிமையில் இருக்கிறாள் என்பதை கவனிக்கிறாள் பலியக்கார. நிஹால் இன்னும் வரவில்லையா என்ற விசாரணையுடன், அந்தப் பக்கம் பாம்பு இருப்­பதாகவும் யமுனாவிடம் கூறுகிறாள் பலியக்கார. தேவைப்பட்டால் அன்று இரவு தனது அறையில் உறங்குமாறு கூறுகிறாள். அவளும் அழைப்பை ஏற்று அந்த அறையில் உறங்கச் செல்கிறாள். கட்டிலுக்கு அருகில் தரையில் பணிப் பெண் உறங்குகிறாள். அவள் இச் செய்கையை ஆத்திரத்துடன் பாhக்கிறாள். அவளை சமையல­றையில் உறங்குமாறு கேட்கிறாள் பலியக்கார அவள் மறுக்கிறாள். எஜமானியின் சொல் கேளா­மல் இருக்கும் பணிப்பெண்ணை திட்டி மிதித்து சமைய­லறைக்கு விரட்ட முயற்சிக்கிறாள். மிதித்த காலை ஆத்திரத்துடன் கடித்துவிட்டுச் செல்கிறாள் அப்பணிப்பெண். இந்த காட்சி­களின் மூலம் அவள் பலியாகாரவுடனான பாலுறவுக்குப் போட்டியாக இன்னொருத்தி வந்துவிட்டாள் என்கிற பொறா­மையும், பலியக்கார தன்னை கைவிட்டுவிட்டாள் என்­கிற ஆத்திரமுமே காட்சிப்படுத்தப்படுகிறது. அன்று யமுனாவுடனான பாலுறவு சாத்தியமற்றுப் போகிறது.

இந்த முயற்சியில் தளராத பலியக்கார ஒரு நாள் இரவு கிளப்புக்கு அழைக்கிறாள் ஒரு கிராமிய பாரம்பரிய பின்னணியைக் கொண்ட யமுனா முதலில் மறுத்தாலும் பலியக்கார பேசி சம்மதிக்க வைக்கிறாள். கவுனை உடுக்க கொடுக்கும் போது மறுக்கும் யமுனாவுக்கு பலியக்காரவே சாரியைக் கழற்றி, கவுனை மாற்றிவிடுகிறாள். கிளப்பில் விஸ்கி குடிக்க கட்டாயப்படுத்துகிறாள் பலியக்­கார. இரவு போதை நிலையில் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு போதை நிலையில் இருக்கின்ற யமுனாவுடன் பாலுறவு கொள்கிறாள் பலியக்கார.

அடுத்த நாள் காலையில் யமுனா பலி­யக்­காரவை திட்டித் தீர்க்கிறாள். பலியக்­காரவும் திட்டுகிறாள். திட்டிக்கொண்டே அருகில் சென்று அணைத்து மீண்டும் வழிக்கு கொண்டுவருகிறாள் பலியக்கார.

இவ்வாறு இருவரும் பாலுறவு கொள்­ளும் போது பணிப்பெண் வந்து பார்த்து விடுகிறாள். அவள் அழுகிறாள். குளியல­றைக்குச் சென்று சுயஇன்பத்தில் ஈடுபடுகிறாள்.

(அந்தப் பகுதியில் இருக்கும் கடை­யொன்­றின் சொந்தக்காரனான குனே அய்யா (சிறியந்த மென்டிஸ்) இந்த வீட்டின் தனி­மையை அவதா­னித்து தனது கடையில் கடன் உள்ள இளைஞ­னான 'விஜே'வை (மகேந்திர பெரேரா) அவ்­வீட்டுக்கு அனுப்பி கொள்­ளையிட நிர்ப்பந்திக்கி­றான். அதற்கு சாதக­மான முறையில் பலியக்கார விஜே அய்யா­விடம் தனது வீட்டுக்கு புல் அறுக்கும் வேலைக்கு யாரையாவது அனுப்பும்­படி கேட்க விஜேவை அனுப்புகிறான். வேலைக்கு வரும் விஜே பணிப்பெண்ணை காதலிக்­கிறான். இருவரும் கடிதங்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். இந்தக்கடிதம் ஒன்று பலியக்­காரவின் கைக்கு கிடைத்ததும் பணிப் பெண்ணை நோக்கி ”நீ என்னோடு படுத்தால் என்னோடு படு. வேறு எவனையாவது படுக்­கத் தேடினால் பொல்லா­தவளாக ஆவேன்” என உதைத்துவிட்டு விஜேவை வேலையில் இருந்து விரட்டி விடுகி­றாள். தான் சொன்ன படி கொள்ளையடிக்­காமல் வந்த விஜேவை குணே அய்யா மிரட்டு­கிறான். பலியக்கார-யமுனா ஆகி­யோரை ஒன்றாகப் படுக்கையில் கண்ட குமாரி விஜேவிடம் வந்து சேருகிறாள். இருவரும் குணே அய்யா கடையில் இல்லாத சமயத்தில் பாலுறவில் ஈடுபடுகிறார்­கள். அதனை பார்த்து விடுகி­றான் குணே அய்யா. இதனை வைத்து விஜேவை மிரட்டு­கிறான். கடனையும் தராது, தனது வீட்டையே படுக்கை­யாக ஆக்கிய­தைக்கூறி தாக்கு­கிறான். எப்படியாவது கொள்­ளையிடுமாறு காலக்கெடு வைக்கி­றான்.)

ஒரு நாள் நிஹால் யமுனாவை படுக்­கைக்கு அழைக்கும் போது அதனை அவள் மறுக்கிறாள். இருவ­ருக்குமிடையில் கைக­லப்பு நடக்கிறது. பலியக்கார இதில் தலை­யிட்டு நிஹாலை விவாகரத்து புரியுமாறு யமுனாவிடம் கூறுகிறாள். சட்ட ஆலோச­னைக்காகவும் கூட்டிச் செல்கிறாள்.

இந்த நிலையில் நிஹால் பணிபுரிந்த வீட்டில் ஒரு நாள் இரவு தனது எஜமானனின் இளம் மனைவியின் காதலன் வருகின்ற போது துப்பாக்கியை காட்டி திட்டி மிரட்டி விரட்டிவிட்டு ஆத்திரத்துடன் வருகிறான். வரும்வழியில் வீட்டு வாசலில் குணே அய்யாவை பார்க்கிறான். (விஜேவையும் குமாரியையும் கொள்ளையடிக்க உள்ளே அனுப்பி விட்டு வாசலில் காவலுக்கு இருந்த குணேவை) குணே அய்யாவை விசா­ரித்த போது கள்வன் ஒருவனை தேடிக்கொண்டி­ருப்பதாக கூறுகிறான் நிஹாலிடம். நிஹால் துப்பாக்கியுடன் எங்கே கள்வன் என மெதுவாகத் தேடிப் போகிறான். அப்படி ஒவ்வொரு அறையாக மெதுவாக திறந்து பார்க்கிற போது யமுனாவும்-பலியக்காரவும் பாலுறவில் ஈடுபடுவதைப் பார்த்துவிடுகி­றான். இருவரையும் ஆத்திரத்துடன் கடுமையாக திட்டிக்கொண்டே பலியக்கா­ரவை சுட்டுவிடுகிறான். நிஹால் என்ன தவறு செய்துவிட்டாய் என யமுனா நிஹாலை அணைத்து அழுகிறாள்.

AddThis Social Bookmark Button


0 comments: to “

Design by Amanda @ Blogger Buster