Wednesday, January 28, 2009


பெண்ணுரிமைகளின் ஒரு கண்காணிப்பு:
ஒரு பயனுள்ள முயற்சி”பெண்கள் தொடர்பூடகக் கூட்டமைப்பு” (women & media collective) எனும் அமைப்பு ”பெண்கள் கண்ணோட்டம்” (ஆங்கிலத்தில் Women's Rights Watch என்றும், சிங்களத்தில் ”ஸ்திரி அய்தீன் விம சும”என்றும்) எனும் பெயரில் மும்மொ ழியிலும் மாதாந்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது. ஏறத்தாழ 30 பக்கங்களைக் கொண்ட இந்த மாதா ந்த அறிக்கையானது யூலையிலிருந்து வெளிவரத்தொடங்கியுள்ளது.

இதன் முக்கியத்துவம் என்ன வெனில் இலங்கையில் வெளிவரும் சகல தினசரிகளையும் கண்காணித்து அப்பத்திரிகைகளில் வெளி வரும் பெண்கள் தொடர்பான செய்தி கள் அனைத்தையும் தொகுக்கின்றமையாகும்.

தமிழில் வீரகேசரி, தினகரன், தினக்குரல், மற்றும் இவற்றின் வாரப்பத்திhpகைகள், சரிநிகர், தின முரசு ஆகியனவற்றிலிருந்தும், சிங்களத்தில் தினமின, திவய்ன, லங்கா தீப, சிலுமின, அவற்றின் வாரப்பத்திரிகைகளும், ஆங்கிலத் தில் டெய்லி நியூஸ், தி.ஐலன்ட், அவற்றின் வாரப்பத்தி ரிகைகள், மிட் வீக் மிரர், சண்டே டைம்ஸ், சண்டே லீடர், லங்கா வுமென் ஆகிய பத்திhpகைகளில் இருந்தும் இந்த செய்திகள் தொகுக்கப்படுகின்றன.

பெண்களுக்கெதிரான மனித உரிமை மீறல்கள், வன்முறைகள், அதன் தன்மை, அதனைப் புரிவோர், அதற்கான சட்ட நடவடிக்கை, அதன் இறுதி நிலை என்பவை குறித்து கண்காணிக்கப் படுகின்றன.

”பெண்களுக்கெதிரான வன்முறைகள்”, ”வெளிநாட்டுக்கு தொழில் புரியச் சென்ற பெண்கள்”, ”பெண்களும், இனப் பிரச்சினையும்” பெண்களும் அவர்களின் சுகாதார உரிமைகளும் (மறுஉற்பத்தி உரிமைகள்)” என்கின்ற ஒவ்வொரு தலை ப்புகளின் கீழும் நாளாந்தம் கிடைக்கின்ற செய்திகள் தொகுக்கப்படுகின்றன.

தொகுக்கப்படுகின்ற செய்திக ளைக் கொண்டு மேற்படி தலைப்புகளின் கீழ் இறுதியில் ஆராயப்படுகின்றன. அவை முன்னுரையில் வழங்கப்படுகின்றன. இவ்வாறு ஆராயப்படும் போது வெறும் பத்திரிகை செய்தி களை மட்டும் நம்பியிருக் காது அவை குறித்து பொறுப்பானவர்களிடம் விசாரித்தறிந்து, அதன் நிலைமை குறித்து ஆராய்ந்து அதன் முடிவுகளும் தரப்படுவது இதன் விசேடத்துவங்களில் ஒன்று.

இந்த முறையியலைப் பின்பற்றி செய்யப்படும் இத்தொகுப்பில் ”பெண்களும் இனப் பிரச்சினையும்” எனும் தலைப் பின் கீழ் தொகுக்கப்படும் நாளாந்த செய்திகளில் யுத்தம், இடப் பெயர்வு, அகதி வாழ்க்கை, காணாமல் போதல், மரணம், காயங்களுக்குள்ளாதல் என பல சம்பவங் கள் பதிவு செய்யப்படுவதைப் பார்க் கும் எவரும் ”பெண்களோடு தொடர்பில்லாத விடயங்கள் இங்கு ஏன்” என ஆச்சரியப்படக்கூடும். ஆனால் யுத்தத்தின் மூலம் சகல பாதிப்புகளுக்கும் உள்ளாவது பெண்களே எனும் கருத்தை ஏற்கும் எவருக்கும் இந்த கேள்வி ஆச்சரியத்தை ஊட்டாது. குடும்பச் சுமை, வீட்டுப் பொறுப்பு, அன்பு பாசம்... என பல் வேறு சமூக கருத்தியல்கள் பெண்களுக்கு மட்டுமே திணிக்கப்பட்டுள்ள இந்த சமூக அமைப்பில் சமூக சிக்கல்கள் அனைத்துக்கும் அதிகம் பலியாவது பெண்களே என்பதை அறிவோம்.

இவ்வாறு பெண்களின் உரிமை கள் தொடர்பாக தொடர்ச்சியாக கண்காணித்து ஆராய்ந்து அதன் முடிவுகளை மும்மொழியிலும் தரும் இம்முயற்சி மிகவும் முக்கியத் துவம் வாய்ந்த முயற்சியென்றால் அது மிகையில்லை.

இப்பிரசுரத்துக்கான நிதியை கனேடிய சர்வதேச அபிவிருத்தி நிறுவ னம் அளித்து வருகிறது. இதன் ஆசிரியராக குமுதினி சாமு வேல் என்பவர் இயங்கி வருகிறார். இவர் பெண்ணிய துறையில் நீண்டகாலமாக ஈடுபட்டு வருபவர்.
அத்தொகுப்பில் இருந்து சில பகுதிகள் பெட்டிச் செய்தியாக இங்கு உள்ளது.

AddThis Social Bookmark Button


0 comments: to “

Design by Amanda @ Blogger Buster